குஷ்பூ நடிக்கும் ‘லட்சுமி ஸ்டோர்ஸ்’  – மெகா  தொடர்…!

குஷ்பூ நடிக்கும் ‘லட்சுமி ஸ்டோர்ஸ்’  – மெகா  தொடர்…!

நீண்ட நாட்களுக்குப்  பிறகு  மீண்டும் சின்னத்திரைக்கு திரும்பியிருக்கிறார் நடிகை குஷ்பூ. சன் தொலைக்காட்சியில் புதிதாக ஒளிபரப்பாகி வரும் ‘லட்சுமி ஸ்டோர்ஸ்’  என்ற புதிய மெகா தொடரின்  மூலம்,  நான்கரையாண்டு கால  இடைவெளிக்குப்  பிறகு,  ஒரு நடிகையாக தனது பயணத்தைத் திரும்பவும் ஆரம்பித்துள்ளார் குஷ்பூ.  

இந்த மெகா தொடரை தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான அவ்னி டெலிமீடியாவின் மூலமாக குஷ்புவே தயாரிக்கிறார்.

இந்தத் தொடரில் குஷ்புவுடன், முரளி மோகன், சுரேஷ் சந்திரன், டெல்லி கணேஷ். சுதா ரவிச்சந்திரன், நட்சத்திரா நாகேஷ், சுரேஷ்  ஹுசைன் அஹ்மதுகான், டெல்லி குமார் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இயக்குநர் A.ஜவஹர் இத்தொடரை  இயக்குகிறார்.

‘லட்சுமி ஸ்டோர்ஸ்’ கடையின் உரிமையாளர் மஹாலிங்கம். இவருக்கு  நான்கு  மகன்கள். முதல்  மகனின்  மனைவியாக…  அதாவது வீட்டின் முதல் மருமகளாக ‘லட்சுமி ஸ்டோர்ஸ்’ குடும்பத்திற்குள் காலடி எடுத்து வைக்கிறார் ‘மஹாலட்சுமி’ என்ற குஷ்பு. 

‘பாக்கியலட்சுமி’ என்னும் நட்சத்திரா  நாகேஷ்  கடையில்  வேலை  செய்யும்  பெண்.  சுதா ரவிச்சந்திரன்  ‘சகுந்தலா  தேவி’ என்னும் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

‘லட்சுமி ஸ்டோர்ஸ்’  தற்போது விறுவிறுப்பான கட்டத்தை அடைந்துள்ளது. மஹாலட்சுமி தனது அன்பையும், ஆதரவையும் அந்தக் குடும்பத்திற்கும், அவர்களுக்கு ஆதாரமான ‘லட்சுமி  ஸ்டோர்ஸ்’க்கும் தருகிறார். ‘லட்சுமி  ஸ்டோர்ஸில்’  தற்போது பாக்கியலட்சுமி  வேலைக்கு  சேர்ந்துள்ளார்.  சகுந்தலா தேவி எப்படியாவது ‘லட்சுமி ஸ்டோர்ஸ்’ கடையை  விலைக்கு  வாங்க  வேண்டும்  என  நினைக்கிறார். 

இதற்கிடையில்  பாக்யலட்சுமிக்கும்  ரவிக்கும்  இடையே காதல்  எப்படி   ஏற்படுகிறது  என்ற காட்சிகளிலும், சகுந்தலா தேவியால் ‘லட்சுமி  ஸ்டோர்ஸ்‘ குடும்பத்திற்குள்  ஏற்படும் மோதல்கள்  என  சீரியல் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

இந்த ‘லட்சுமி ஸ்டோர்ஸ்’ மெகா தொடர் உங்கள் சன்  டிவியில்  திங்கள்  முதல் சனிக்கிழமைவரை  தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.




error: Content is protected !!