அறிமுக நாயகன் ஆதிக் பாபு நடிக்கும் ‘குற்றம் புரிந்தால்’ திரைப்படம்..!

அறிமுக நாயகன் ஆதிக் பாபு நடிக்கும் ‘குற்றம் புரிந்தால்’ திரைப்படம்..!

யு.வி.எஸ். எண்டர்டெயின்மெண்ட் வழங்கும் அமராவதி பிலிம்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சுகந்தி ஆறுமுகம் தயாரித்துள்ள திரைப்படம் ‘குற்றம் புரிந்தால்’.

இப்படத்தின் ஹீரோவாக ஆதிக் பாபு அறிமுகமாகியுள்ளார். ஹீரோயினாக அர்ச்சனா அறிமுகமாகியுள்ளார். இவர்களுடன் ‘நாடோடிகள்’ அபிநயா, எம்.எஸ்.பாஸ்கர், ராம்ஸ், நிஷாந்த், அருள் டி.சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

கே.எஸ்.மனோஜ் இசையமைக்கும் இப்படத்திற்கு கே.கோகுல் ஒளிப்பதிவு செய்ய, கபிலன், கார்த்திக் நேத்தா ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். எஸ்.பி.அஹமது படத் தொகுப்பு செய்திருக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் டிஸ்னி.

படம் குறித்து இயக்குநர் டிஸ்னி கூறுகையில், “யாரென்றே தெரியாத நபர்களால் தனது குடும்பத்தினர் கொல்லப்பட்ட பிறகு, மன உளைச்சளால் விரக்தியடைந்த நாயகன் நீதியை தன் கைகளில் எடுத்துக் கொள்கிறான்.

கொலையாளிகளை மட்டுமல்லாமல் அவர்கள் சட்டத்தில் இருந்து தப்பிக்க காரணமாக இருந்தவர்களையும் தண்டிக்க குறி வைக்கிறான் நாயகன். அவன் தண்டித்தானா, இல்லையா என்பதை காதல், செண்டிமெண்ட், ஆக்‌ஷன் கலந்து சொல்லியிருக்கிறோம்…” என்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் பாண்டிச்சேரில் படமாக்கப்பட்டிருக்கிறது. முழு படப்பிடிப்பும் முடிவடைந்து தற்போது பின்னணி வேலைகளில் நடைபெற்று வருகிறது.