‘குருதி ஆட்டம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது..!

‘குருதி ஆட்டம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது..!

ஒரு படத்தின் வெற்றி நடிகர்கள் தேர்விலேயே பாதி நிர்ணயிக்கப்படுகிறது என்று சொல்வார்கள். உண்மை, அதை தனது ‘8 தோட்டாக்கள்’ படத்தின் மூலமே நிரூபித்திருந்தார் இளம் இயக்குநரான ஸ்ரீகணேஷ்.

இவர் தனது இரண்டாவது படமாக நடிகர் அதர்வாவின் நடிப்பில் ‘குருதி ஆட்டம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

மதுரைப் பின்னணியில் உள்ள கேங்க்ஸ்டர்களை பற்றிய ஆக்‌ஷன் படமாக உருவாகும் இந்த படத்தை ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் தயாரிப்பாளர் டி.முருகானந்தம் தயாரிக்கிறார்.

இப்படத்தில் பிரியா பவானி சங்கர் நாயகியாக நடிக்க… ராதிகா சரத்குமார், ராதாரவி இருவரும் முக்கிய கதாப்பத்திரங்களில் நடிக்கின்றனர்.

சமீபத்தில் இந்தக் ‘குருதி ஆட்டம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி, ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

வழக்கமாக ஒரு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் நாயகன் மட்டுமே இடம் பெற்றிருப்பார். ஆனால் இந்தக் ‘குருதி ஆட்டம்’ ஃபர்ஸ்ட் லுக்கில் நாயகன் அதர்வா முரளி, குழந்தை நட்சத்திரம் திவ்யதர்ஷினியை முதுகில் சுமந்து நிற்கிறார். வித்தியாசமான இந்த ஃபர்ஸ்ட் லுக் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது.

kuruthy aattam movie stills

இது பற்றி இயக்குநர் ஸ்ரீகணேஷ் பேசும்போது, “ரசிகர்களுக்கு கதையின் கரு, இரு கதாப்பாத்திரங்களை மையமாக கொண்டது என்பதை உணர்த்தவே ஃபர்ஸ்ட் லுக் அவ்வாறு வடிவமைக்கப்பட்டது. இந்தக் ‘குருதி ஆட்டம்’ படம்  ஒரு விபத்திற்குப் பிறகு நாயகனுக்கும் ஒரு பெண் குழந்தைக்கும் இடையில் உருவாம் உறவையும், அவர்களது பயணத்தைப் பற்றியும் கூறுவதாகும்.

ஆக்‌ஷன், திரில்லர் வகைப்படமாக இப்படம் இருந்தாலும் மிக அழுத்தமான செண்டிமெண்ட் காட்சிகள் இப்படத்தில் இருக்கும். இதனைச் சுற்றியே மொத்த கதையும் அமைக்கப்பட்டிருக்கிறது.

சில தவிர்க்க முடியாத காரணங்களினால் படப்பிடிப்பு இடையில் தடைபட்டிருந்தாலும் இப்போது அனைத்து தடைகளும் நீங்கி, இம்மாத இறுதியில் மதுரை மாநகரில் இறுதிக்கட்ட படப்பிடிப்பை நடத்தவுள்ளோம். ஃபர்ஸ்ட் லுக்கிற்கு கிடைத்திருக்கும் வரவேற்பு மொத்த படக் குழுவிற்கும் பெரும் புத்துணர்ச்சி தந்துள்ளது. ஒரே கட்டமாக படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடிக்கவுள்ளோம்…” என்றார்.




error: Content is protected !!