திரைப்பட இயக்குநராக மாறிய கலை இயக்குநர்

திரைப்பட இயக்குநராக மாறிய கலை இயக்குநர்

கலைத்துறையில் கடந்த 16 வருடங்களாக கலை இயக்குநராகப் பணியாற்றிய ஆ.உமா ஷங்கர், தனது திரையுலக வாழ்க்கையில் பல கட்டங்களை கடந்து இப்போது ஒரு படத்தின் இயக்குநராக தன் கலைப் பணியைத் துவக்கியுள்ளார்.

ஓம் ஸ்ரீசாய் பிலிம்ஸ் தயாரிப்பில் ஆ.உமா ஷங்கர் இயக்கிய ‘ஈஷா’ என்னும் குறும் படம் டெல்லியில் நடைபெற்ற ‘தாதா சாகிப் பால்கே-2017’ விழாவில் சிறந்த குறும் படத்திற்கான தனி தகுதிச் சான்றிதழை பெற்றுள்ளது.

உலகம் முழுவதிலும் இருந்து 1700 படங்களுக்கும் மேற்பட்ட குறும் படங்கள் இந்தப் போட்டியில் கலந்து கொண்டதில், தமிழ்நாட்டில் இருந்து இந்த ஒரு படம் மட்டுமே தெர்வு செய்யப்பட்டு அந்த விழாவில் திரையிடப்பட்டது.

மேலும் இதில் பணியாற்றிய இசையமைப்பாளர் குரு கல்யாண், ஒளிப்பதிவாளர் கிறிஸ்டோபர் ஜோஸப், படத் தொகுப்பாளர் சாரதி ஆகியோருக்கும் சிறப்பு தனித் தகுதிக்கான சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.

இயக்குநர் உமா ஷங்கர் மற்றும் இசையமைப்பாளர் குரு கல்யாண் கூட்டணியில் இந்தக் குறும் படத்தின் கதை, தற்போது ‘குறள் 146’ என்கிற பெயரில் சினிமாவாக உருவாகி வருகிறது. இதன் முதல் கட்டப் பணியாக பாடல் பதிவுடன் சமீபத்தில் படம் துவக்கப்பட்டுள்ளது.

இந்த பாராட்டை தனது எழுத்துக்கும், இயக்கத் திறமைக்கும் கிடைத்த அங்கீகாரமாக கருதும் இயக்குநர் உமாஷங்கர் அதே அளவு பாராட்டையும், பெருமையையும் அடையும் வகையில் ‘குறள் 146’ படத்துக்கான பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.