full screen background image

உலக மயமாக்கல் பற்றி சிந்திக்க வைக்கும் தமிழ்ப் படம் ‘குச்சி ஐஸ்’ 

உலக மயமாக்கல் பற்றி சிந்திக்க வைக்கும் தமிழ்ப் படம் ‘குச்சி ஐஸ்’ 

உலக மயமாக்கல் பற்றி சிந்திக்க வைக்கும் விதத்தில் ‘குச்சி ஐஸ்’ என்கிற தமிழ்த் திரைப்படம் உருவாகிறது.

இந்தப் படத்தை திருமலை சினி டிரஸ்ஸஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஜெயபாலன் தயாரிக்கிறார்.

‘நாடோடிகள்’ பரணி நாயகனாகவும், புதுமுகம் ரத்திகா நாயகியாகவும் நடிக்கவுள்ளனர். மற்றும் தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் இந்தப் படத்தில் நடிக்க உள்ளனர்.

கே.எஸ்.பழனி ஒளிப்பதிவு செய்கிறார். தோஷ் நந்தா இசையமைக்கிறார். பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய இயக்குநர் வி.ஜெயப்பிரகாஷ் இந்தப் படத்தை இயக்குகிறார். இவர் ஏற்கெனவே ‘சாதிசனம்’, ‘காதல் FM’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இது இவர் இயக்கும் மூன்றாவது படமாகும்.

 உலக மயமாக்கல் எப்படி ஒவ்வொருவர் வாழ்க்கையையும்,  சமூகத்தையும் பாதித்துள்ளது என்பதை உணர்வுபூர்வமாகச் சொல்கிறது இத்திரைப்படம்.  

‘குச்சி ஐஸ்’ படத்தின் தொடக்க விழா இன்று காலை ஈரோட்டில் நடைபெற்றது. தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று ஜூன் மாதம் படம் வெளியாகவுள்ளது.

Our Score