“சாதனை படைத்தவர்களில் பெரும்பாலோர் நடு பெஞ்ச் மாணவர்கள்தான்..” – ‘கூட்டத்தில் ஒருத்தன்’ பட விழாவில் எழுந்த சர்ச்சை..!

“சாதனை படைத்தவர்களில் பெரும்பாலோர் நடு பெஞ்ச் மாணவர்கள்தான்..” – ‘கூட்டத்தில் ஒருத்தன்’ பட விழாவில் எழுந்த சர்ச்சை..!

ட்ரீம் வேரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘கூட்டத்தில் ஒருத்தன்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று காலை சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.

kootathil-oruthan-movie-audio-launch-stills-16

இந்த விழாவில் நடிகர் சிவக்குமார், நடிகர் சூர்யா, இயக்குநர் த.செ.ஞானவேல், ஹீரோ அசோக் செல்வன், இசையமைப்பாளர் நிவாஸ் கே.பிரசன்னா, இயக்குநர் ராஜு முருகன், இயக்குநர் தரணி, இயக்குநர் ராதாமோகன், ஆர்ட் டைரக்டர் கதிர், நடிகர்கள் பால சரவணன், ஆர்.ஜே.பாலாஜி, கேமராமேன் பிரமோத், எடிட்டர் லியோ ஜான் பால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேசும்போது, “கூட்டத்தில் ஒருத்தன்’ எனக்கு மிகவும் பிடித்த கதை களம் கொண்ட மிகச் சிறந்த திரைப்படம். இப்படத்தின் இயக்குநர் ஞானவேல் எங்கள் குடும்ப நண்பர். அவரை எங்களது குடும்பத்தில் ஒருவர் என்றுகூட சொல்லலாம்.

kootathil-oruthan-movie-audio-launch-stills-22

ஞானவேல் திரைப்படத்தை உருவாக்கும் கலையை நன்கு பயின்றவர். அவருடைய படத்தை நான் தயாரித்திருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. நிவாஸ் பிரசன்னா அவருடைய இசையால் எங்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார். அவருடைய இசை இப்படத்துக்கு மிகப் பெரிய பலமாகும்…” என்றார்.

விழாவில் நடிகர் சிவக்குமார் பேசும்போது, “இப்படத்தின் தயாரிப்பாளர் மிகச் சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து தயாரித்து வருகிறார். அவர் கார்மெண்ட்ஸ் துறையில் வேலை பார்த்து இப்போது சிறந்த தயாரிப்பாளராக மாறி மாயா, ஜோக்கர், காஷ்மோரா போன்ற மிக சிறந்த படைப்புகளை தயாரித்து வருகிறார்.

kootathil-oruthan-movie-audio-launch-stills-19

என்னால்தான் படித்து பட்டம் வாங்க முடியவில்லை. என் மகனையாவது படித்து பட்டம் வாங்க வைக்கவேண்டும் என்று எண்ணி சூர்யாவை படிக்க வைத்தேன். அவர் இன்று  B.com பட்டதாரி. படித்து பட்டம் வாங்கி என்னுடைய வயிற்றில் பாலை வார்த்துவிட்டார்.

அவர் படித்து முடித்த பின்பு முதன் முதலில் அம்பத்தூரில் இருந்து சோழிங்கநல்லூரில் வேலைக்கு செல்வார். அவர் வேலைக்கு சென்ற இடத்தில் யாருக்கும் அவர் என்னுடைய மகன் என்று தெரியாது. 6 மாதங்கள் கழித்து அவர்களுக்கு தெரிந்த பின்பு அவர் வேலையை விட்டு வெளியே வந்துவிட்டார்.

அப்படி இருந்து கடுமையாக உழைத்த அவர் இன்று அதைவிட கடுமையாக உழைத்து நாயகனாக மாறி வெற்றி பெற்று இருக்கிறார். அவர் திரையில் மிகப் பெரிய அளவில் சாதிப்பார் என்று நான் நினைத்துகூட பார்த்ததில்லை.

‘கூட்டத்தில் ஒருத்தன்’ இயக்குநரான பத்திரிகையாளர் த.செ.ஞானவேல் என்னை முதன்முதலில் பேட்டி காண வந்து எங்கள் குடும்பத்தோடு ஐக்கியமாகி இன்று ‘அகரம் குழும’த்தின் அரங்ககாவலராக இருந்து வருகிறார். இன்று திறமைமிக்க அவர் இயக்குநராகி இருப்பது எனக்கு மகிழ்ச்சி.

இப்படத்தின் பூஜை மருந்தீஸ்வரர் கோவிலில் அதிகாலை 4 மணிக்கு நடந்தது அதில் நானும் கலந்து கொண்டேன். எஸ்.ஆர்.பிரபுவை போல் ஒரு தயாரிப்பாளரை கண்டு பிடித்து நல்ல படத்தை இயக்கியுள்ள ஞானவேலுக்கு வாழ்த்துக்கள்…” என்றார்.

விழாவில் இயக்குநர் ராஜுமுருகன் பேசும்போது, “நானும் இப்படத்தின் இயக்குநரான ஞானவேலும் விகடனில் ஒன்றாகத்தான் வேலை பார்த்தோம்.

raju murugan-1

நான் போயஸ் கார்டன் அருகே உள்ள ஒரு பாட்டியை பேட்டி எடுக்க செல்ல வேண்டும் என்று அனுமதி கேட்டு கடிதம் கொடுக்கும்போது, அவர் முதலமைச்சரை பேட்டி எடுக்க வேண்டும் என்று கேட்டு கடிதம் கொடுப்பார்.

நான் கமல்ஹாசனை பேட்டி எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து அவருடைய பி.ஆர்.ஓ.வின் நம்பரை கண்டுபிடிக்கவே, மூன்று நாட்கள் ஆகிவிடும். ஆனால் அவரோ அந்த நேரத்தில் உலக நாயகன் கமல்ஹாசனோடு அமர்ந்து பேசி கொண்டு இருப்பார்.

இதை ஏன் சொல்கிறேன் என்றால் ஞானவேல் அந்த அளவுக்கு ஆற்றல் மிக்கவர். அவர் இயக்கியுள்ள இந்த ‘கூட்டத்தில் ஒருவன்’ திரைப்படம் நிச்சயம் வெற்றி பெரும்…” என்றார்.

விழாவில் நடிகர் பாலா சரவணன் பேசும்போது, “இந்த ‘கூட்டத்தில் ஒருத்தன்’ படத்தின் மூலம் பள்ளி வகுப்பில் ‘நடு பெஞ்ச்’ மாணவர்களை பற்றிய படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர். அவருக்கு என்னுடைய பாராட்டுக்கள்.

kootathil-oruthan-movie-audio-launch-stills-11

நான் பள்ளியில் படிக்கும் போது முதல் பெஞ்ச் மாணவர்களைத்தான் ஆசிரியர்கள் எல்லோரும் பாராட்டுவார்கள். கடைசி பெஞ்ச் மாணவர்களை எல்லோரும் அடிப்பார்கள். திட்டுவார்கள். ஆனால் இந்த நடு பெஞ்ச் மாணவர்களை யாரும் திட்டவும் முடியாது.. அடிக்கவும் முடியாது.. ஏனென்றால், அவர்கள் பரீட்சையில் தேர்ச்சி அடைந்துவிடுவார்கள். எல்லா நாளும் கல்லூரிக்கும் வந்துவிடுவார்கள். அவர்களை ஒன்றும் செய்ய முடியாது. அவர்களை யாருக்கும் தெரியாமாலும் போய்விடும். அவர்களை பற்றிய படம்தான் இது. அந்த வகையில் இது தனித்துவமான படமாக இருக்கும். நானெல்லாம் ‘Accuist’ வகையை சேர்ந்தவன்…” என்றார் நடிகர் பால சரவணன்.

விழாவில் ஏற்புரை நிகழ்த்திய இயக்குநர் த.செ.ஞானவேல், “எனக்கு பத்திரிக்கைதான் முதல் முகவரி. அதனால் நான் வேலை செய்த பத்திரிக்கையான விகடனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

t s gnanavel

நான் முதன் முதலில் பத்திரிக்கையாளனாக போகிறேன் என்றதும் எங்கள் குடும்பத்தில் அனைவருமே பயந்தார்கள். பின்னர் நான் சிவகுமார் அய்யாவோடு இருப்பதை எல்லாம் தொலைக்கட்சியில் பார்த்த பின்புதான் என் மீது எங்கள் வீட்டில் நம்பிக்கை வந்தது.

நான் இந்த இடத்துக்கு வருவதற்கு முக்கிய காரணம் எங்கள் குடும்பத்தில் உள்ள எல்லோரும்தான். என்னுடைய அண்ணன் நான் படிக்க வேண்டும் என்பதால் அவருடைய படிப்பையே தியாகம் செய்தார். அவரால்தான் இந்த இடத்தில் நான் உள்ளேன். அவர் இங்குதான் இருக்கிறார்.இங்கு அமர்ந்து நான் மேடையில் இருப்பதை ரசித்து கொண்டிருக்கிறார். அவருக்கு எனது நன்றி.

நான் பத்திரிக்கையில் வேலை பார்க்கும்போது எனக்கு கிடைத்த அனுபவம்தான் இந்த படம். நான் கார்த்தியை பேட்டி காணும்போது, ‘நான் என்னுடைய குடும்பத்தில் நடு பையனாக பிறந்தததால் என் மீது யாருக்கும் பெரிதாக கவனம் இருக்காது. முதல் பையன் அண்ணன் சூர்யா அம்மா செல்லம். எங்கள் வீட்டின் கடைசி பிள்ளை என் தங்கை. அவர் அப்பா செல்லம். இடையில் பிறந்த நான் எல்லோருக்கும் பொது என்று இருந்து வந்தேன்…’ என்று அவர் கூறியதுதான் இந்த படம் உருவாவதற்கு காரணமான முக்கிய புள்ளி.

இந்த உலகத்தை மாற்றியமைத்த பலரும் நடு பெஞ்ச் மாணவர்கள்தான். அப்படிப்பட்டவர்களைப் பற்றி நல்ல கருத்தை கூறும் படம்தான் இது…” என்றார்.

kootathil-oruthan-movie-audio-launch-stills-21

விழாவில் நடிகர் சூர்யா பேசும்போது, “படத்தின் இயக்குநர் ஞானவேலின் உழைப்பு மிகவும் ஆழமான உழைப்பாகும். எங்களுடைய அகரம் குழுமத்துக்கு அப்பெயரை வழங்கியது அவர்தான். எங்களுடைய அகரத்தின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணம் ஞானவேல்தான். அவரால்தான் எனக்கு இந்த சமூகத்தில் நடிகன் என்பதையும் தாண்டி நிறைய நல்ல பெயர் கிடைத்தது.1500 பேர் இப்போது அகரத்தின் மூலம் படித்துள்ளர்கள். வருகிற 2020-ல் 3000-க்கும் மேலான மாணவர்கள் படித்து முடித்து வெளியே வருவார்கள்.

நான் ‘கூட்டத்தில் ஒருத்தன்’ திரைப்படத்தை பார்த்துவிட்டேன், மிக சிறந்த படம் இது. நிச்சயம் உங்கள் அனைவரையும் யோசிக்க வைக்கும் படமாக இது இருக்கும். அசோக் செல்வன் இந்த கதைக்கு கண கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். சிறு வயதில் இருந்து அவரை பார்த்து வருகிறேன். அவருடைய நடிப்பு மிகவும் அருமையாக உள்ளது.

நிவாஸ் கே.பிரசன்னாவின் இசையமைப்பு நிச்சயம் படத்துக்கு பலம் சேர்க்கும். அவருடைய இசையே வேறு… அந்த இசை மிக துல்லியமான இசை. சமீபத்தில் நான் பார்த்ததில் மிக சிறந்த லைவ் ஷோ இவர் இப்போது நடத்தியதுதான்…” என்றார் சூர்யா.