சிம்பு ரசிகராக மகத் நடிக்கும் ‘கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா’ திரைப்படம்.!

சிம்பு ரசிகராக மகத் நடிக்கும் ‘கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா’ திரைப்படம்.!

வர்ணாலயா சினி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் ஃபாவின்ஸ் பால் மற்றும் ஆர்.டி. மதன்குமார் ஆகியோர் தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா’.

இத்திரைப்படத்தில் ‘பிக்பாஸ் சீசன்-2’ நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளையடித்த மகத் ராகவேந்திராவும் ஐஸ்வர்யா தத்தாவும் நாயகன், நாயகியாக நடிக்கின்றனர்.

தரண் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் என்னியன் ஜெ.ஹாரீஸ்(ஒளிப்பதிவு), பிரவீன் பாஸ்கர்(படத் தொகுப்பு), கிஷோர்(கலை இயக்கம்), லோகன்(பாடல்கள்), ஸ்டன்னர் சாம்(சண்டை இயக்கம்), சாண்டி(நடன இயக்கம்) மற்றும்  கண்ணன் (SFX) ஆகியோரும் பணிபுரிகிறார்கள்.

நகர்ப்புற பின்னணியில் ரொமாண்டிக் காமெடி படமாக இது உருவாகவிருக்கிறது. கடந்த மாதம் பூஜையுடன் துவங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று மாலை பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் இந்தப் படத்தின் தலைப்பை படத்தின் நாயகனான மகத் ராகவேந்திரா வெளியிட்டார்.

நடிகர் சிம்புவின் வெற்றி படத்தின் புகழ் பெற்ற பாடல்களில் இருந்து ஈர்க்கப்பட்ட ஒரு வரியை அதாவது ‘கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா’ என்பதைத் தலைப்பாக வைத்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் சிம்புவின் தீவிரமான ரசிகராக மகத்  நடித்திருக்கிறார்.

படத்தின் இயக்குநரான சி.பிரபுராம் படம் பற்றிப் பேசும்போது, “இந்தப் படத்தில் மகத், ஒரு வட சென்னை இளைஞராக, சிம்புவின் தீவிரமான ரசிகராக நடித்திருக்கிறார்.

உண்மையில், அவர்கள் இருவரின் நட்பு மக்களுக்கு தெரிந்ததுதான். அது மகத் கதாபாத்திரத்திற்கு கூடுதல் மைலேஜாக இருக்கும் என்று நான் நினைத்தேன். இந்தப் படத்தில் மகத் நடித்திருக்கும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தலைப்பாக இது இருக்கும்.

இது ஒரு ரொமாண்டிக் காமெடி படம் என்றாலும், படத்தில் எமோஷனல் காட்சிகளும் மிகவும் மென்மையாக கையாளப்பட்டுள்ளன. மகத் மற்றும் பணக்கார குடும்ப பெண்ணாக நடித்துள்ள ஐஸ்வர்யாவின் கெமிஸ்ட்ரி நிச்சயம் பேசப்படும்” என்றார்.




error: Content is protected !!