மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் ஜீவா – நிக்கி கல்ரானி நடிக்கும் ‘கீ’

மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் ஜீவா – நிக்கி கல்ரானி நடிக்கும் ‘கீ’

‘நண்பனின் நண்பன் எனக்கும் நண்பன்’ என்று நட்பை பற்றி ஆழமாக பேசும் ‘நாடோடிகள்’, ‘ஈட்டி’ எனும் ஸ்போர்ட்ஸ் படம், ‘மிருதன்’ எனும் ஜாம்பி படம், சிம்பு நடிப்பில் உருவாகும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’  எனும் ஜனரஞ்சகமான  திரைப்படம் என  வெவ்வேறு களங்களில் பயணிக்கும் வெற்றி படங்களை தயாரித்து வரும் தயாரிப்பு நிறுவனம் குளோபல் இன்போடெய்ன்மென்ட்.

IMG_2883

இந்நிறுவனம் அடுத்ததாக தயாரிக்கும் வெற்றி படைப்பு  ‘கீ.’ இது குளோபல் இன்போடெய்ன்மென்ட்  நிறுவனத்தின் 10-வது தயாரிப்பாகும். இப்படத்தில் கதாநாயகனாக ஜீவாவும், நாயகியாக நிக்கி கல்ராணியும் நடிக்கிறார்கள்.

IMG_2827

மேலும் இவர்களுடன் அனைகா சோடி , R.J. பாலாஜி, பத்மசூர்யா,  ராஜேந்திர பிரசாத், சுஹாசினி, மனோபாலா, மீரா கிருஷ்ணன் ஆகியோர் நடிக்கின்றனர். கதை திரைக்கதை எழுதி இப்படத்தை இயக்கவுள்ளார் காலீஸ். இவர் இயக்குநர் செல்வராகவனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிவர்.

IMG_2888

ஒளிப்பதிவு – அனீஸ் தருண் குமார் (ரங்கூன் படத்தின் ஒளிப்பதிவாளர்), இசை – விஷால் சந்திரசேகர், படத்தொகுப்பு – நாகூரன், கலை – எஸ்.எஸ் . மூர்த்தி, ஆடை அலங்காரம்- ஜாய் கிரிஸில்டா , சாரா, நடனம் – ‘பாபா’ பாஸ்கர், தயாரிப்பு – எஸ். மைகேல் ராயப்பன், எம்.செராபின் ராய சேவியர்,  எழுத்து, இயக்கம் – காலீஸ்.

IMG_3148 

இன்று இந்தப் படம் பூஜையுடன் சென்னையில் துவங்கியது. இப்படத்தின் படபிடிப்பு ஒரே கட்டமாக தொடர்ந்து நடைபெறவுள்ளது. 
error: Content is protected !!