ஜீவா, நிக்கி கல்ரானி நடிப்பில் உருவாகும் ‘கீ’ திரைப்படம்

ஜீவா, நிக்கி கல்ரானி நடிப்பில் உருவாகும் ‘கீ’ திரைப்படம்

குளோபல் இன்போடெய்ன்மெண்ட் திரு.S.மைக்கேல் ராயப்பன் தயாரித்து வழங்கும் புதிய திரைப்படம் ‘கீ’.

நட்பின் பெருமையை பேசும்  ‘நாடோடிகள்‘,  விளையாட்டை அடிப்படையாக கொண்ட  ‘ஈட்டி‘  மற்றும் ஹாரர் படமான  ‘மிருதன்‘  போன்ற பல வெற்றிப் படங்களை கொடுத்த  குளோபல் இன்போடெய்ன்மெண்ட்  தயாரிப்பு நிறுவனம்,  தற்போது  S.T.R.  நடிக்கும்  ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்‘  படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. 

இந்நிலையில் அடுத்த படைப்பாக ஜீவா நடிப்பில் உருவாகவிருக்கும் படம் ‘கீ‘. இது இந்நிறுவனத்தின்  10–வது படைப்பாகும்.  இப்படத்தில் கதாநாயகனாக ஜீவா நடிக்கிறார். நாயகியாக நிக்கி கல்ராணி மற்றும் இரண்டாவது நாயகியாக அனைகா சோடி இருவரும் நடிக்கின்றனர். 

இவர்களுடன்  R.J. பாலாஜி,  பத்மசூர்யா,  ராஜேந்திர பிரசாத்,  சுஹாசினி,  மனோபாலா, மீரா கிருஷ்ணன் ஆகியோரும் நடிக்கவுள்ளனர்.

எழுத்து & இயக்கம் – காலீஸ், இசை – விஷால் சந்திரசேகர், ஒளிப்பதிவு – அனிஷ் தருண் குமார், படத்தொகுப்பு – நாகூரன், கலை – அசோக், நடனம் – ‘பாபா‘ பாஸ்கர், ஆடை வடிவமைப்பு – ஜாய் கிரிஸில்டா, சாரா, நிர்வாக தயாரிப்பு – ராஜேந்திரன், தயாரிப்பு – எஸ். மைக்கேல் ராயப்பன்,  செராபின் ராய  செவியர், தயாரிப்பு நிறுவனம் – குளோபல் இண்போடெயின்மெண்ட்.

செல்வராகவனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த காலீஸ் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். 

இப்படத்தின் படப்பிடிப்பு,  கடந்த ஏப்ரல் 21-ம் தேதி  தொடங்கியது. வரும் மே 20-ம் தேதியன்று முடிவடைகிறது. மொத்த படப்பிடிப்பும் ஒரே கட்டமாக நடந்து முடியவிருக்கிறது. 

இந்நிலையில் ஜீவாவின் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற‘ படம் மே மாதம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




error: Content is protected !!