“ஜீவா பிஞ்சிலேயே பழுத்தவர்; விஜய் சேதுபதி பழுத்து பிஞ்சானவர்..” – இயக்குநர் கே.வி.ஆனந்தின் கிண்டல்..!

“ஜீவா பிஞ்சிலேயே பழுத்தவர்; விஜய் சேதுபதி பழுத்து பிஞ்சானவர்..” – இயக்குநர் கே.வி.ஆனந்தின் கிண்டல்..!

குளோபல் இன்போடெயின்மெண்ட் சார்பில் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரித்திருக்கும் ‘கீ’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று காலை சென்னை வடபழனி கமலா திரையரங்கில் நடைபெற்றது.

இந்த விழாவில் நாயகன் ஜீவா, நாயகி நிக்கி கல்ராணி மற்றும் படக் குழுவினருடன் ஏராளமான திரைக் கலைஞர்கள், பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

நடிகை சுஹாசினி, இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், கே.வி.ஆனந்த், ஜாக்குவார் தங்கம், கே.ராஜன், விஜய் சேதுபதி, பி.எல்.தேனப்பன் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

suhasini manirathnam

விழாவில் நடிகை சுஹாசினி மணிரத்னம் பேசுகையில், “38 வருடங்களுக்கு முன்பு நான் படத்தில் நடிக்கும்போது எப்படி எனக்குள் ஒரு படபடப்பு இருந்ததோ, அதேபோல் தற்போது இப்படத்தில் நடிக்கும்போதும் இருந்தது. பழைய காலங்களில்  பெரியவர்களிடம் நிறைய கற்றுக் கொண்டோம். தற்போது காலீஸ் போன்ற அறிமுக இயக்குநர்களான சிறியவர்களிடம் கற்றுக் கொள்கிறோம். படத்தில் அனைவருடனும் நடித்ததில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்…” என்றார்.

இயக்குநர் கே.வி.ஆனந்த் பேசும்போது, “இசை வெளியீட்டு விழாவிற்கு என்னை அழைத்ததற்கு நன்றி. ஜீவா திறமையுள்ள நடிகர், விஜய் சேதுபதியும் அப்படித்தான். ஜீவா பிஞ்சிலேயே பழுத்தவர். விஜய் சேதுபதி பழுத்து பிஞ்சானவர்.

k.v.anandh

பாடல்களும், காட்சியமைப்பும் மிகவும் பிரம்மாண்டமாக உள்ளது. இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகருக்கும், இயக்குனர் காலீஷ் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள். தைரியமாக படத்தை தயாரிக்க முன் வந்த மைக்கல் ராயப்பனுக்கும் எனது வாழ்த்துக்கள். ஒளிப்பதிவாளர் அபிநந்தன் மிகச் சிறப்பாக தன் வேலையை செய்துள்ளார்…” என்றார்.

நடிகர் கோவிந்த் பத்மசூரியா பேசியது “தமிழில் எனக்கு இதுதான் முதல் படம். நான் ஜீவா படங்கள் நிறைய பார்த்திருக்கேன். நான் அவருடைய ரசிகன். படப்பிடிப்பு துவங்கும் 2 மாதங்களுக்கு முன்பே டிரைலர் ரெடி பண்ணிட்டாங்க. நான் ரொம்பவே வியந்தேன். படத்தில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பயாளருக்கும் எனது நன்றி…” என்றார்.

Kee_Movie_Audio_Launch_Stills-14

இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது, “சுகாசினியும் நானும் சிறு வயதில் இருந்து நெருங்கிய நண்பர்கள். இந்தப் படத்தின் போஸ்டர்களை பார்க்கும்போதே தெரிகிறது. தற்போது இருக்கும் தலைமுறையினருக்கு நல்ல கருத்தை தரும் படமாக அமையும். ப்ளூ வேல் கேம் மாதிரி ஒரு ஆபத்தான விளையாட்டை எதிர்கொள்வதால் ஏற்ப்படும் விளைவுகளை இத்திரைப்படம் தெரிவிக்க உள்ளது. இசையமைப்பாளர்,  இயக்குநர் மற்றும் படத்தில் நடித்த அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.” என்றார்.

இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் பேசுகையில், “இப்படத்திற்கு இசையமைக்க என்னை பரிந்துரை செய்த R.J. பாலாஜி அவவர்களுக்கு நன்றி. வாய்ப்பளித்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் அவர்களுக்கும் மிக்க நன்றி. பாட்டு எல்லாமே அருமையாக வந்துள்ளது. உங்கள் அனைருக்கும் மிகவும் பிடிக்கும் வகையில் அமையும். பாடல்களை அழகாக எழுதிய தாமரை, கார்க்கி, அமுதவன், சுபு ஆகியோருக்கு என் நன்றிகள்…” என்றார்.

nikki galrani

நடிகை நிக்கி கல்ராணி பேசும்போது, “இப்படத்தில் நடிக்க வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கும், இயக்குநர் காலீஷூக்கும் நன்றி. ஜீவா மற்றும் பலருடன் இப்படத்தில் நடித்துள்ளேன். மகிழ்ச்சியாக உள்ளது. சமூகத்திற்கு நல்லக் கருத்தை தரும் படமாக அமையும். தற்போது சமூகத்தில் பெண்கள் இருக்கும் நிலையை பிரதிபலிக்கும் ஒரு கதாபாத்திரத்தில் நான் நடித்துள்ளேன்…” என்றார்.

Kee_Movie_Audio_Launch_Stills-10

நடிகர் விஜய் சேதுபதி பேசும்போது, “இப்படத்தின்  பாடல்கள் மற்றும் டிரையிலர்  பிரம்மாண்டமாக இருக்கு. நண்பன் ஜீவாவிற்கு எனது வாழ்த்துக்கள். நிக்கி கல்ராணி மற்றும் இசையமைப்பாளர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். இயக்குநர் காலீஸின் முதல் படத்தின் முயற்சிக்கு வாழ்த்துக்கள். தயாரிப்பாளர் மைக்கல் ராயப்பன் அவர்கள் மிகப் பெரிய வெற்றியை அடைய வேண்டும்..” என்றார்.

Kee_Movie_Audio_Launch_Stills-11

நடிகர் விஷால் பேசும்போது, “படத்தின் பாடல்கள் மற்றும் ட்டிரைலர் பார்த்தேன். மிக அற்புதமாக இருக்கு. படக் குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்..” என்றார்.

படத்தின் நாயகன் ஜீவா பேசும்போது, “அருமையான கதையைக் கொண்டது இத்திரைப்படம். தற்போதைய டெக்னாலஜியில் வளர்ந்து வரும் ஒரு பிரச்சனையை கூறும் படமாக இது இருக்கும்.

jeeva

படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் மலையாள நடிகர் கோவிந்த் பத்மசூரியா நடித்துள்ளார். மிகவும் சிறப்பாக நடித்துள்ளார். நிக்கி கல்ராணியுடன் நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. படத்திற்கு விஷால் அருமையாக இசையமைத்துள்ளார். தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்கும் மற்றும் இயக்குநர் காலீஷ் அவர்களுக்கும் நன்றிகள் மற்றும் பாராட்டுக்கள்…” என்றார்.

Kee_Movie_Audio_Launch_Stills-12

விழாவில் படத்தின் இயக்குநரான காலீஸ் பேசும்போது,  “பல வருடங்களாக இந்தக் கதையைக் கையில் வைத்துக் கொண்டு அலைந்தேன். யாருமே தயாரிக்க முன் வரவில்லை.

வாழ்க்கையே இருண்டு போனதை போன்று என்னை நானே சுருக்கிக்  கொண்டு ஒரு அறைக்குள் அடைந்து கிடந்தேன். இறுதியில், ஒரு வெளிச்சமாக.. என் வாழ்க்கையின் ஒளியாக.. மைக்கேல் ராயப்பன் ஸார் இந்தப் படத்தைத் தயாரிக்க முன் வந்தார். அவருக்கு எனது மிகப் பெரிய நன்றி.

படத்தில் நடித்த ஜீவா, நிக்கி கல்ராணி மற்றும் அனைத்து நடிகர், நடிகைகளும் எனக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்து நடித்துக் கொடுத்தார்கள். அவர்களுக்கும் எனது நன்றிகள் கோடி.. மைக்கேல் ராயப்பன் ஸார் போல மற்ற தயாரிப்பாளர்களும் எங்களை போல இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்து உதவ வேண்டும்..” என்று கேட்டுக் கொண்டார்.

இத்திரைப்படம் வரும் பிப்ரவரி 9-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.