‘பிரேமம்’ அஞ்சு கூரியன் அறிமுகமாகும் தமிழ்த் திரைப்படம்

‘பிரேமம்’ அஞ்சு கூரியன் அறிமுகமாகும் தமிழ்த் திரைப்படம்

‘Writer Imaginations’ நிறுவனம் தமிழில் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்த ‘துருவங்கள் பதினாறு’ திரைப்படத்தினை கேரளாவில் விநியோகித்த நிறுவனமாகும்.

இந்த நிறுவனம் தற்போது தமிழில் நேரடியாக திரைப்படங்களை தயாரிக்கும் பணியில் இறங்கியுள்ளது.

இன்னும் பெயர் வைக்கப்படாத இந்தப் படத்தில் ‘கயல்’ சந்திரன் ஹீரோவாக நடிக்கிறார். ‘பிரேமம்’ படத்தில் நடித்த அஞ்சு கூரியன் நாயகியாக நடிக்கவுள்ளார். அறிமுக இயக்குநரான மஹாவிஷ்ணு இந்தப் படத்தை தயாரித்து, இயக்கவுள்ளார். JFB Group’ன் நிறுவனர் ஃபாரூக் இப்படத்தின் தயாரிப்பு பணிகளை மேற்கொள்கிறார்.

“இந்தப் படத்தின் கதை இதுவரையிலும் எந்தவொரு தமிழ் சினிமாவிலும் பார்த்திராத புதுமையானது. காதலும், நகைச்சுவையும், எதிர்பாராத திருப்பங்களும் கொண்ட சுவாரஸ்யமான படமாக இது இருக்கும்…” என்கிறார் இயக்குநர் மஹாவிஷ்ணு.

படப்பிடிப்பு சென்னையிலும், பாண்டிச்சேரியிலும் நடைபெறவுள்ளது.

 




error: Content is protected !!