full screen background image

‘கபாலி’ படம் தோல்வி – கவிஞர் வைரமுத்துவின் திடீர் கண்டுபிடிப்பு..!

‘கபாலி’ படம் தோல்வி – கவிஞர் வைரமுத்துவின் திடீர் கண்டுபிடிப்பு..!

‘கபாலி’ திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் என்றும், தமிழில் இதுவரையிலான அனைத்து வசூல் சாதனைகளையும் முறியடித்திருப்பதாக தயாரிப்பாளர் தரப்பும், மீடியா உலகமும் ஒரு சேர சந்தோஷக் கூச்சல் போட்டுக் கொண்டிருக்கும் நிலையில் ‘கபாலி திரைப்படம் தோல்வி’ என்று பட்டவர்த்தனமாக ஒரு மேடையில் பேசியிருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினியின், ஆத்மார்த்த நண்பரான கவிப்பேரரசு வைரமுத்து.

 

லயன்ஸ் கிளப் சார்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வைரமுத்து தான் பேசும்போது “கபாலியின் தோல்வியை  நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்..” என்று திடீரென்று தேவையே இல்லாமல் பேசியிருக்கிறார்.

‘கபாலி’யின் பிரமாண்டமான வசூல் வேட்டையை வைரமுத்து நிச்சயம் அறிந்திருப்பார். ரஜினியின் மிக நெருங்கிய நண்பராக இருந்தும், உண்மையை மறைத்து இப்படியொரு பொது மேடையில் எப்படி இப்படியொரு பொய்யை அவரால் சொல்ல முடிந்தது என்று தெரியவில்லை.

திரையுலகில் விசாரித்தபோது, “ரஜினியின் படங்களில் தொடர்ந்து பாடல்கள் எழுதி வரும் வைரமுத்துவுக்கு இந்த ‘கபாலி’ படத்தில் பாடல்கள் எழுத வாய்ப்பு கிடைக்கவில்லை. 

ஏனெனில் இயக்குநர் ரஞ்சித் தன்னுடைய ஆஸ்தான கவிஞர்களையே இந்தப் படத்தில் பயன்படுத்தியிருக்கிறார். ரஜினி ஆரம்பத்திலேயே டெக்னீஷயன்ஸ், நடிகர், நடிகைகள் விஷயத்திலெல்லாம் தான் தலையிட மாட்டேன் என்று சொல்லிவிட்டதால், வைரமுத்துவுக்கு இங்கே வேலையில்லாமல் போய்விட்டது.

இதனால் சில லட்சங்கள் இழப்புக்கு ஆளான வைரமுத்து அந்தக் கோபத்தில்தான் வைரமுத்து இப்படி பேசியிருப்பதாக” சொல்கிறார்கள். 

அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு ஈடாக சென்னை பெசண்ட் நகரில் ஒரு வெள்ளை மாளிகையை கட்டி அதில் வாசம் செய்து வரும் தமிழறிஞர் வைரமுத்து இனிமேலும் பணத்துக்காக இப்படி அலையலாமா..? அதுவும் தன்னுடைய நீண்ட நாள் நெருங்கிய நண்பரையே முட்டுச் சந்துக்கு தள்ளலாமா..?

தனக்கு நட்பு பெரிதல்ல.. பணமே பெரிது என்பதை வைரமுத்து இதன் மூலமாக நிரூபித்திருக்கிறார் என்று கோடம்பாக்கமே கொதிப்பில் இருக்கிறது..! 

Our Score