‘புலி’க்கு போட்டியாக களமிறங்கும் ‘கத்துக்குட்டி’!

‘புலி’க்கு போட்டியாக  களமிறங்கும் ‘கத்துக்குட்டி’!

வரும் அக்டோபர் முதல் தேதி இளைய தளபதி விஜய்யின் ‘புலி’ படம் மட்டும் எவ்விதப் போட்டியுமின்றி ஸோலோவாக வெளிவர இருந்த நிலையில், தற்போது திடீரென்று நரேன், சூரி, சிருஷ்டி டாங்கே நடிப்பில் பத்திரிகையாளர் இரா.சரவணன் இயக்கியிருக்கும் ‘கத்துக்குட்டி’ படமும் அன்றைக்கு வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னணி நிறுவனங்களே விஜய் படத்துக்கு வழிவிட்டு விலகி நின்ற நிலையில், ஆர்யா அனுஷ்கா நடிப்பில் பிவிபி சினிமாஸ் தயாரித்திருக்கும் ‘இஞ்சி இடுப்பழகி’கூட கழன்று கொண்டுள்ள நிலையில், இந்த ‘கத்துக்குட்டி’  படம் திடீரென ‘புலி’க்குப் போட்டியாக இறங்கி இருப்பது திரையுலகத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

“விஜய் படத்துடன் மோதவில்லை. காந்தி ஜெயந்தி விடுமுறை தினத்தை மனதில் வைத்தே நாங்கள் எங்களது  ‘கத்துக்குட்டி’யை வெளியிடுகிறோம்…” என ‘கத்துக்குட்டி’  படத்தின் தயாரிப்பாளர்கள் தரப்பில் சொல்கிறார்கள்.

இருந்தாலும், ‘கத்துக்குட்டி’  சொன்னபடி ரிலீஸாகுமா அல்லது கடைசி நேரத்தில் கழன்று கொள்ளுமா என்பது இன்னும் ஒரு வாரத்தில் தெரிந்துவிடும். 

 
error: Content is protected !!