full screen background image

டிசம்பர் 23-ம் தேதி வெளியாகிறது விஷால்-தமன்னா நடித்த ‘கத்திச் சண்டை’

டிசம்பர் 23-ம் தேதி வெளியாகிறது விஷால்-தமன்னா நடித்த ‘கத்திச் சண்டை’

ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றி பெற்ற ‘ரோமியோ ஜூலியட்’ படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் தயாரித்துள்ள படம் ‘கத்திச் சண்டை.’

இந்த படத்தில் விஷால் கதாநாயகனாக நடித்துள்ளார். நாயகியாக தமன்னா நடித்திருக்கிறார். நகைச்சுவை வேடத்தில் வடிவேலு, சூரி இருவரும் நடித்துள்ளனர். மேலும் முக்கிய வேடத்தில் தெலுங்கு ஹீரோ ஜெகபதி பாபு நடித்துள்ளார். மற்றும், தருண் அரோரா, சரண் தீப், ஜெயபிரகாஷ், நிரோஷா, தாடி பாலாஜி, ஆர்த்தி, பாவா லட்சுமணன் ஆகியோருடன் ஏராளமான நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – ரிச்சர்ட் எம்.நாதன், இசை – ‘ஹிப் ஹாப்’ தமிழா, பாடல்கள்  -நா.முத்துக்குமார், ‘ஹிப் ஹாப்’ தமிழா, எடிட்டிங் – ஆர்.கே.செல்வா, சண்டை பயிற்சி –கனல் கண்ணன், தளபதி தினேஷ், ஆக்சன் கணேஷ், கலை  -உமேஷ்குமார், நடனம் -தினேஷ், ஷோபி, தயாரிப்பு மேற்பார்வை – பிரேம் ஆனந்த், தயாரிப்பு  – எஸ்.நந்தகோபால், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – சுராஜ்.

படம் பற்றி இயக்குநர் சுராஜ் பேசும்போது, “விஷால் நடித்த படங்களிலேயே இந்த படம்தான்  அதிக பொருட்செலவில் தயாராகியுள்ளது. இந்த படத்தின் பாடல் காட்சிகளுக்காகவும், சண்டை காட்சிகளுக்காகவும், இதர காட்சிகளுக்காகவும் கலை இயக்குநரான உமேஷ் குமாரின் கை வண்ணத்தில் பிரம்மாண்டமான செலவில் ஏராளமான அரங்குகள் அமைக்கப்பட்டு படமாக்கியிருக்கிறோம்.

படத்தின் முதல் பாதியில் சூரியும், இரண்டாம் பாதியில் வடிவேலுவும் காமெடியில் கலக்கி இருக்கிறார்கள். பக்கா கமர்ஷியல், ஆக்ஷன், காமெடி படமாக உருவாகியுள்ள இந்த ‘கத்திச் சண்டை’ படம் வரும் 23-ம் தேதியன்று வெளியாகவுள்ளது..” என்றார். 

Our Score