ரகுமான்-குரு சோமசுந்தரம் நடிப்பில் உருவாகும் ‘கதாயுதம்’ திரைப்படம்

ரகுமான்-குரு சோமசுந்தரம் நடிப்பில் உருவாகும் ‘கதாயுதம்’ திரைப்படம்

விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வெற்றி பெற்ற ‘ரம்மி’ படத்தை இயக்கிய இயக்குநர் கே.பாலகிருஷ்ணன் இயக்கும் அடுத்த படம் ‘கதாயுதம்.’ 

இந்தப் படத்தை ஸ்ரீவள்ளி ஸ்டுடியோ பட நிறுவனம் மிகப் பிரம்மாண்டமான செலவில் தயாரிக்கிறது. ‘ரம்மி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இந்நிறுவனம் தாயரிக்கும் படம் இது.                                                                                      

‘ஜோக்கர்’ படத்தின் மூலம் சினிமா ரசிகர்கள் மத்தியில் பரபரப்பான நடிகராக கவனிக்கப்பட்டவர் குரு சோமசுந்தரம். ‘துருவங்கள் 16’ படத்தின் மூலம் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வந்தவர் ரகுமான்.  இந்த இருவரும் இந்தக் ‘கதாயுதம்’ படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். 

நாயகியாக ‘இந்தியா-பாகிஸ்தான்’ படத்தின் நாயகியான சுஷ்மா ராஜ் நடிக்கிறார். மற்றும் காளி வெங்கட்,  துளசி,  ரமா,  பாரதி கண்ணன் ஆகியோருடன் இன்னும் சில முன்னணி நட்சத்திரங்களும் நடிக்கிறார்கள்.

வசனம் – மோநா.பழனிச்சாமி, ஒளிப்பதிவு – ஞானம், இசை – ஸ்ரீகாந்த் தேவா, பாடல்கள்  – கபிலன், மோ.நா.பழனிச்சாமி, படத் தொகுப்பு – சசிகுமார்.ஜி, கலை இயக்கம்  – ஆர். விஜயகுமார், நடனம் – பிருந்தா, சிவராக் சங்கர், சண்டை பயிற்சி – சக்தி சரவணன், தயாரிப்பு மேற்பார்வை – எஸ்.ஆனந்த்ராஜ், எழுத்து, இயக்கம் – கே.பாலகிருஷ்ணன், தயாரிப்பு  –  ஸ்ரீவள்ளி ஸ்டுடியோ.

படத்தை பற்றி இயக்குநர் கே.பாலகிருஷ்ணன் பேசும்போது, “வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு இருக்கும். அப்படி கனவுகளோடு இருக்கும்  இரண்டு பேர் சந்திப்பதும், அவர்களின் கனவு நிறைவேற போராடுறதும்தான் இந்தப் படத்தின் கதை. படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு புதுக்கோட்டையில் நடைபெற்றது. அடுத்தக் கட்ட படபிடிப்பு சென்னை, பொள்ளாச்சி, கேரளா போன்ற இடங்களில் நடைபெற உள்ளது…” என்றார் இயக்குநர்.