மகளிர் தின வாழ்த்துக்களோடு ‘கருத்துக்களை பதிவு செய்’ படத்தின் முதல் போஸ்டர் வெளியீடு..!

மகளிர் தின வாழ்த்துக்களோடு ‘கருத்துக்களை பதிவு செய்’ படத்தின் முதல் போஸ்டர் வெளியீடு..!

திரையுலகில் ஒரு பட தயாரிப்பு நிறுவனம் ஆழமாக காலூன்ற வேண்டுமானால் அடுத்தவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். அந்த நம்பிக்கையை பட தயாரிப்பிலும் வினியோகத்துறையிலும் அழுத்தமாக பதிய வைத்த நிறுவனம் R.P.M. cinemas.

‘ஜித்தன் 2’, ‘1-AM’ படங்களை தயாரித்து வெளியிட்ட இந்த நிறுவனம் ‘களத்தூர் கிராமம்’, ‘143’ ஆகிய வெளியார் படங்களையும் சொன்ன தேதியில் வெளியிட்டு உள்ளது

இந்த நிறுவனம் அடுத்ததாக ஒரு குறுகிய கால தயாரிப்பாக  ‘கருத்துக்களை பதிவு செய்’ என்ற படத்தை தயாரிக்கிறது.

இந்தப் படத்தில் கலையுலகின் லட்சிய நடிகர் என்று போற்றப்பட்ட பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனின்  பேரன் எஸ்.எஸ்.ஆர்.ஆரியன் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக உபாஷ்ணா ராய் நடிக்கிறார்.

ஒளிப்பதிவு – மனோகர், இசை - கணேஷ் ராகவேந்திரா, பாடல்கள் – சொற்கோ, கலை –மனோ, நடனம் - எஸ்.எல்.பாலாஜி,  சண்டை இயக்கம் - ஆக்‌ஷன் பிரகாஷ், தயாரிப்பு மேற்பார்வை - D.B.வெங்கடேசன், கதை திரைக்கதை வசனம் -   ராஜசேகர்.   இவர் ‘மிர்ச்சி’ சிவா நடித்து வெளியான ‘யா யா’ படத்தை இயக்கியதுடன் விரைவில் வெளி வர உள்ள ‘பாடம்’ என்ற படத்தையும் இயக்கி உள்ளார். இணை தயாரிப்பு – J.S.K.கோபி, தயாரிப்பு, இயக்கம் - ராகுல்.

சமூக வலைத்தளங்களினால் மக்களுக்கு கிடைக்கும் நன்மைகளுக்கு இடையே, அவற்றினால் மக்களுக்குக் குறிப்பாக பெண்களுக்கு உருவாகும் அபாயத்தையும் இந்தப் படம் சுட்டிக் காட்டுகிறது. முகநூலைப் பயன்படுத்தும் எல்லா பெண்களுக்கும் ஒரு பாடமாக இருக்கும்வகையில் இந்தப் படத்தின் கதை இருக்கிறதாம்.

இன்று உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுவதையொட்டி இந்த ‘கருத்துகளை பதிவு செய்’ படத்தின் First Title Poster வெளியிடப்பட்டுள்ளது.