சூர்யா தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் புதிய படம்..!

சூர்யா தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் புதிய படம்..!

நடிகர் சூர்யாவின் சொந்தத் தயாரிப்பு நிறுவனமான 2-D  எண்ட்டெர்டெயின்மென்ட்  நிறுவனம் தனது புதிய படத்தினை இன்று துவக்கியுள்ளது.

இந்தப் படத்தில் கார்த்தி ஹீரோவாக நடிக்கிறார். சாயிஷா சாய்கல் ஹீரோயினாக நடிக்கிறார். ‘பசங்க’ பாண்டிராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.

இந்தப் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று ஆரம்பமானது. படபிடிப்பை சூர்யா தாயார் லட்சுமி சிவகுமார் குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார். தொடர்ந்து படப்பிடிப்பு ஐந்து நாள் சென்னையில் நடைபெறும். இதையடுத்து தென்காசியில் 40 நாட்கள் தொடர் படப்பிடிப்பு நடைபெறுகிறது.

இன்றைய விழாவில் நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி, சத்யராஜ், பொன்வண்ணன்,  சூரி,  ஸ்ரீமன்,  மாரிமுத்து,  இளவரசு,  சௌந்தர்ராஜா, நடிகைகள் சாயிஷா சாய்கல், பானுப்ரியா,  ரமா,  மௌனிகா,   ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், டைரக்டர் மனோஜ்குமார்,   இயக்குநர்கள் சுசீந்திரன்,  சுதா கங்கோரா, இசையமைப்பாளர்  D.இமான், 2-D நிறுவனத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகர பாண்டியன், தயாரிப்பாளர்கள்  S.R.பிரகாஷ் பாபு, S.R.பிரபு, பிரின்ஸ் பிச்சர்ஸ் லட்சுமண்,  சக்தி பிலிம்ஸ் சக்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.