கார்த்திக்கு அக்காவாக ஜோதிகா நடிக்கும் புதிய திரைப்படம்..!

கார்த்திக்கு அக்காவாக ஜோதிகா நடிக்கும் புதிய திரைப்படம்..!

‘வயாகம்18 ஸ்டூடியோஸ்’ நிறுவனமும் ‘பேரலல் மைண்ட்ஸ்’ நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் நேற்று கோவாவில் துவங்கியது.

இந்தப் படத்தில் நடிகர்  கார்த்தி நாயகனாக நடிக்கிறார். கார்த்திக்கு அக்காவாக நிஜத்தில் அவரது அண்ணியான ஜோதிகா நடிக்கிறார்.

மேலும், நடிகர் சத்யராஜ் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க, அவருடன் மலையாள நடிகர் ஆன்சன் பால்  மற்றும் சிலரும் நடிக்கவுள்ளனர்.

கோவிந்த் வசந்த் இசையமைக்க, ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். ‘திருஷ்யம்’, ‘பாபநாசம்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஜீத்து ஜோசப், இந்தப் படத்தை இயக்குகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கோவாவில் நேற்று தொடங்கியது. 2019 அக்டோபரில் படம் வெளியாகவுள்ளது.




error: Content is protected !!