கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் ஜோடி மீண்டும் இணையும் புதிய திரைப்படம்..!

கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் ஜோடி மீண்டும் இணையும் புதிய திரைப்படம்..!

கார்த்தி நடிக்கவிருக்கும் 17-வது திரைப்படத்தில் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தை தொடர்ந்து கார்த்தி, ரகுல்  பிரீத்சிங் வெற்றி  ஜோடி மீண்டும்  இணைகிறார்கள் .

இப்போதுவரையிலும் பெயரிடப்படாத இந்த ‘கார்த்தி 17’ படத்தை   ரிலையன்ஸ் எண்டெர்டைன்மென்ட்   வழங்க – பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் எஸ். லஷ்மண் குமார் தயாரிக்கிறார்.

இவர், சூர்யா நடித்த  சூப்பர் ஹிட்டான ‘சிங்கம்-2′ படத்தை தயாரித்தவர். தற்போது விரைவில் வெளியாக இருக்கும் திரிஷா  நடிப்பில் R. மாதேஷ் இயக்கத்தில் ‘மோகினி’ படத்தை தயாரித்து வருகிறார்.

படத்தில் மேலும் பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன், R.J.விக்னேஷ், அம்ருதா, ரேணுகா மற்றும் பலர் நடிக்கிறார்கள் .   இவர்களுடன் முக்கிய வேடத்தில்  நவரச நாயகன் கார்த்திக்கும் நடிக்கவிருக்கிறார்.

இப்படத்தின் மூலம் ரஜத் ரவிசங்கர் இயக்குநராக தமிழ்ச் சினிமாவில் அறிமுகமாகிறார். படத்திற்கு கதை திரைக்கதை, வசனம் எழுதி படத்தை இயக்கவிருக்கும் இவர், ‘எங்கேயும் எப்போதும்’ இயக்குநர் சரவணன்,  பிரபல  இந்தி இயக்குநர் அனுராக் காஷ்யப், இயக்குநர்  R.கண்ணன் இவர்களுடன் இணை இயக்குநராகப் பணி புரிந்தவர்.

இசை – ஹாரிஸ் ஜெயராஜ், ஒளிப்பதிவு – R  வேல்ராஜ், படத் தொகுப்பு – ரூபன், கலை – ஜெயஸ்ரீ நாராயணன், சண்டை இயக்கம் – அன்பறிவ், பாடல்கள் – கபிலன், தாமரை, விவேக், நிர்வாக தயாரிப்பு – K.V.துரை, இணை  தயாரிப்பு – ஜெய் ஜெகவீரன், எழுத்து, இயக்கம் – ரஜத் ரவிசங்கர்.

 ‘கார்த்தி 17’ படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் 8-ம் தேதி சென்னையில் ஆரம்பமாகிறது. இதை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளில்15 நாட்களும், ஹைதராபாத், மும்பை,  மற்றும் இமயமலை பகுதிகளிலும்  உருவாகிறது.

இந்த ‘கார்த்தி-17’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று காலை பூஜையுடன் துவங்கியது. 

இந்த விழாவில் நடிகர்கள் சிவகுமார்,  சூர்யா,  கார்த்தி,  நடிகை ரகுல் ப்ரீத் சிங், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், படத் தொகுப்பாளர் ரூபன்,  தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார், இயக்குநர் ரஜத் ரவிசங்கர்,  2-D Entertainment  ராஜசேகர் பாண்டியன், சண்டை பயிற்சி இயக்குநர்கள் அன்பறிவ்,  இயக்குநர் பாண்டிராஜ், இயக்குநர் மாதேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நடிகர் சிவகுமார் கிளாப் அடித்து படப்பிடிப்பை துவக்கி வைக்க, நடிகர் சூர்யா கேமராவை ரோலிங் செய்தார்.