இணையத்தில் நேரடியாக வெளியாகவிருக்கும் ‘கர்மா’ திரைப்படம்

இணையத்தில் நேரடியாக வெளியாகவிருக்கும் ‘கர்மா’ திரைப்படம்

கிரியேட்டிவ் கிரிமினல் என்கிற நிறுவனத்தின் சார்பில் ஆர்.அரவிந்த் இயக்கத்தில் உருவாகியுள்ளது 'கர்மா' திரைப்படம்.

ஒளிப்பதிவு - V.B. சிவானந்தம், படத் தொகுப்பு - வினோத் பாலன், இசை – எல்.வி.கணேசன், பாடல் – கவிப்பேரரசு வைரமுத்து, மக்கள் தொடர்பு - நிகில் முருகன். 

KARMA - Hires movie still

இத்திரைப்படம் Experimental வகையைச் சேர்ந்த Independent Cinemaவாகும். சமீபத்தில் நடந்த Madrid International Film Festival-ல் சிறந்த இயக்குநருக்கான தகுதி போட்டியில் இந்தப் படத்தின் இயக்குநர் பெயரும் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமில்லாமல், Hollywood Sky Film Festival-ளிலும் சிறந்த திரைப்படத்திற்கான போட்டியில் இடம் பெற்றிருந்தது.

இத்திரைப்பட வெளியீட்டில் ஒரு புதுமையைச் செய்யவிருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள். இந்தப் படத்தினை தியேட்டர்களுக்கு வருவதற்கு முன்பாகவே முதலில் இணையத்தில் வெளியிட இருக்கிறார்களாம். வரும் செப்டம்பர் 16-ம் தேதி முதல் ஆன்லைனில் இந்தப் படத்தைக் காணலாம். iTunes, Google Play, Amazon Video உட்பட பல இணையதளங்களில் இப்படத்தை காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

இந்த ‘கர்மா’ படத்தை புகழ் பெற்ற பாலிவுட் இயக்குநர் அனுராக் கஷ்யப் டிவிட்டரில் வெளியிடவிருக்கிறார். ஆன்லைனில் நேரடியாக வெளியாகவிருக்கும் முதல் தமிழ் திரைப்படம் இந்த ‘கர்மா’தான்..!

படத்தினை இணையத்தில் வெளியிடுவது பற்றி பேசிய இயக்குநர் ஆர்.அரவிந்த், "இன்று, உலகம் முழுவதிலும் இணையத்தின் வளர்ச்சி ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்திருப்பதை மறுக்க முடியாது.

எங்களுடைய ‘கர்மா’ படங்களை போல இனி வரும் காலங்களில் இணையத்தில் திரைப்படங்களை வெளியிடுவது சர்வசாதாரணமாகலாம். அதற்கு முன்னோடியாக நாங்கள் திகழ்வதில் பெருமையடைகிறோம்.." என்றார்.

நல்ல முயற்சி. வெற்றி பெற்றால் மற்றவர்களும் பின் தொடர்வார்களே..?!