எஸ்.எஸ்.ஆரின் பேரன் ஆரியன் அறிமுகமாகும் ‘கருத்துக்களை பதிவு செய்’

எஸ்.எஸ்.ஆரின் பேரன் ஆரியன் அறிமுகமாகும் ‘கருத்துக்களை பதிவு செய்’

திரையுலகில் ஒரு பட தயாரிப்பு நிறுவனம் ஆழமாக காலூன்ற வேண்டுமானால் திரையுலகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். அந்த நம்பிக்கையை பட தயாரிப்பிலும் வினியோகத் துறையிலும் அழுத்தமாக பதிய வைத்துள்ள நிறுவனம் R.P.M. cinemas.

‘ஜித்தன்-2’, ‘1 AM’ ஆகிய படங்களை தயாரித்து வெளியிட்ட இந்த நிறுவனம், ‘களத்தூர் கிராமம்’, ‘143’ ஆகிய படங்களையும் சொன்ன தேதியில் வெளியிட்டு உள்ளது.

இந்த நிறுவனம் அடுத்ததாக ஒரு குறுகிய கால தயாரிப்பாக ‘கருத்துக்களை பதிவு செய்’ என்ற படத்தை தயாரித்து வருகிறது.

இந்தப் படத்தில் தமிழ்த் திரையுலகத்தில் ‘லட்சிய நடிகர்’ என்று போற்றப்பட்ட பழம் பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனின் பேரன் எஸ்.எஸ்.ஆர்.ஆரியன் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக உபாஷ்ணா ராய் நடிக்கிறார். மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

ஒளிப்பதிவு – மனோகர், இசை – கணேஷ் ராகவேந்திரா, பாடல்கள் – சொற்கோ, கலை –மனோ, நடனம் – எஸ்.எல்.பாலாஜி, சண்டை பயிற்சி – ஆக்‌ஷன் பிரகாஷ், தயாரிப்பு மேற்பார்வை  – D.B.வெங்கடேசன், கதை, திரைக்கதை, வசனம் – ராஜசேகர்.  இணை தயாரிப்பு – J.S.K.கோபி, தயாரிப்பு, இயக்கம் – ராகுல்.

2018-01-22-PHOTO-00000058

சமீபத்தில் துவங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பை பிரபல இயக்குநர் சுசி கணேசன் ‘கிளாப்’ அடித்து துவக்கி வைத்தார்.

படம் பற்றி இயக்குநர் ராகுல் பேசும்போது, “இந்தப் படத்தின் கதை இன்று நமது சமூகத்தில் அன்றாடம் நடந்து கொண்டிருக்கும் விஷயம்தான். சோஷியல் மீடியா என்றழைக்கப்படும் சமூக வலை தளங்களினால் தவறான பாதைக்குள் போகும் இன்றைய இளைய தலைமுறையினர் சந்திக்கும் ஆபத்துக்களை விவரிக்கும் படம்தான் இந்த ‘கருத்துக்களை பதிவு செய்’ திரைப்படம். இன்றைய கால கட்டத்திற்கு அவசியமான படமாக இது இருக்கும் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி ஒரே கட்டத்தில் நடைபெற்று, ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது…” என்றார் இயக்குநர் ராகுல்.




error: Content is protected !!