ஒரேயொரு நடிகர் நடித்திருக்கும் ‘கார்கில்’ திரைப்படம்

ஒரேயொரு நடிகர் நடித்திருக்கும் ‘கார்கில்’ திரைப்படம்

சில திரைப்படங்களில் கணக்கிலடங்காத அளவுக்கு நடிகர், நடிகையர் நடித்திருப்பார்கள். யார், எந்த கேரக்டர் என்று யோசித்தாலும் நினைவுக்கு வராத அளவுக்கெல்லாம் சில படங்களில் கதாபாத்திரங்கள் இருக்கும்.

ஆனால் இதெல்லாம் இல்லாமல் ஒரேயொரு நடிகரை நடிக்க வைத்து ஒரு திரைப்படம் தயாராகியுள்ளது. படத்தின் பெயர் ‘கார்கில்’.

இந்தப் படத்தில் நடித்திருக்கும் ஒரேயொரு நடிகர் ஜிஷ்னு. ஒளிப்பதிவு -கணேஷ் பரமஹம்ஸா, இசை – விக்னேஷ் பாய், பாடல்கள் – பாரி இளவழகன் மற்றும் தர்மா, படத் தொகுப்பு – அபிநாத், மக்கள் தொடர்பு – செல்வரகு, தயாரிப்பு – சுபா செந்தில், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – சிவானி செந்தில்.

Kargil-Song3

ஒரு ஊர்ல ஒரு ராஜா, அந்த ராஜா மகா வீரர். எல்லா போரிலும் அவர்தான் ஜெயிப்பாருன்னு சின்ன வயசுல அம்மா, அப்பா சொல்லி ஒரு கதையைக் கேட்டிருப்போம்.   

அதேபோலத்தான் இந்த கார்கில் திரைப்படத்திலும் ஒரு கார்ல ஒரே ஒரு ராஜா.. சென்னை டூ பெங்களூர் கார்ல  போற நம்ம ராஜாவுக்கு காதலியுடன் சின்ன விரிசல்.. அந்த சின்ன விரிசல் ‘கார்கில்’ போர் அளவுக்கு உருமாற, ஹீரோ ராஜா போராடி வெல்லும் காதல் கதைதான் இந்தப் படத்தின் கதையாம்.

இப்படம் பற்றி இயக்குநர் சிவானி செந்தில் பேசும்போது, “தமிழ்த் திரையுலக வரலாற்றில் முதல் முறையாக ஒரேயொரு நடிகன் மட்டும் திரையில் தோன்றும் புதுமையான திரைப்படம் இது. பாடல் காட்சிகளில் மட்டுமே அவருடைய காதலி தோன்றுவார்.

புதிய படைப்புகளுக்கு மக்களின் ஆதரவு நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் மிக குறைந்த பட்ஜெட்டில் தரமான படைப்புடன் களம் இறங்கியுள்ளேன்.

கதையின் நாயனகாக ஜிஷ்னு எனும் அறிமுக நாயகன் தோன்றுகிறான், அவனது அர்ப்பணிப்பு நிச்சயம் நிலையான இடத்தை அவனுக்கு பெற்று தரும்.  மற்றும் ஏனைய தொழில் நுட்ப கலைஞர்களும் தமிழ் திரையுலகில் மிக உயரத்திற்கு செல்ல காத்திருக்கும்  அறிமுக நபர்களை எனபதில் பெருமை கொள்கிறேன்

இப்படத்தின் இரண்டு பாடல்களும் மற்றும் மொத்த படப்பிடிப்பும் சென்னை தொடங்கி பெங்களுர் எலெக்டரானிக்ஸ் சிட்டி முடிய மிக குறைவான நாட்களில் படமாக்கப்பட்டது. அனைத்து போஸ்ட் புரொடெக்‌ஷன் வேலைகளும் நிறைவு பெற்று படம் ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது. படம் மிக விரைவில் திரைக்கு வரும்..” என்றார்.