1960-1980-களில் நடந்த உண்மைச் சம்பவமே ‘கங்கு’ திரைப்படம்..!

1960-1980-களில் நடந்த உண்மைச் சம்பவமே ‘கங்கு’ திரைப்படம்..!

அங்காள பரமேஸ்வரி சினி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் விக்னேஷ் சிவராமன் தன் முதல் படைப்பாக ‘கங்கு’ படத்தை தயாரிக்கிறார்.

இந்தப் படத்தில் நிறைய புதுமுகங்கள் நடிக்க பல பிரபலங்களும் உடன் நடிக்க உள்ளனர். மற்றும் படத்தில் மிகச் சிறந்த டெக்னிஷீயன்களும் பணிபுரிய உள்ளனர்.

‘பிரம்மா.காம்’ படத்தை இயக்கிய புருஷ் விஜயகுமார் இப்படத்தை எழுதி இயக்குகிறார். 

1960 மற்றும் 1980-ம் ஆண்டுகளில் நடைபெற்று மறைக்கப்பட்ட ஒரு உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் இக்கதையை எழுதி இயக்குகிறார் புரூஷ் விஜய்குமார்.

இன்று பூஜையுடன் துவங்கிய இத்திரைப்படம் மிகுந்த நுணுக்கத்துடன் அற்புதமாக உருவாகவுள்ளது.

1960 மற்றும் 1980 காலகட்டங்களை கண்முன் நிறுத்தும்படி மிகப் பிரமாண்டமான செலவில் செட் போடப்பட்டு வருகிறது. மேலும் பல நிஜ லோகேஷன்களிலும் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

இன்று துவங்கிய பூஜையில் நடிகர் ராமகிருஷ்ணன், நடிகைகள் வடிவுக்கரசி, கவுதமி, கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம் உடபட பல பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.