ஹை கான்செப்ட் திரைக்கதையைக் கொண்ட ‘கண்டதை படிக்காதே’ திரைப்படம்..!

ஹை கான்செப்ட் திரைக்கதையைக் கொண்ட ‘கண்டதை படிக்காதே’ திரைப்படம்..!

‘கபடம்’ படத்தை இயக்கிய இயக்குநர் ஜோதி முருகன் அடுத்து இயக்கி வரும் திரைப்படம் ‘கண்டதை படிக்காதே’..!

இந்தப் படத்தில் ஆதித்யா ஹீரோவாக நடித்திருக்கிறார். இவர் தமிழில் ‘பயமறியான்’, ‘கபடம்’ ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார், ‘திருப்பாச்சி’ புகழ் ‘பான் பராக்’ ரவி ஆர்யான் வில்லனாக நடித்திருக்கிறார்,

பிரீத்தி, சுஜி, வைஷாலி, ஜென்னி என நான்கு ஹீரோயின்கள் இதில் நடித்திருக்கிறார்கள். நவீன், சீனு, மணிமாறன், நாகராஜ் போன்ற நடிகர்கள் பட்டாளமே இதில் நடித்திருக்கிறது.

நடிகை சபிதா ஆனந்த்தும் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். தன் வாழ்நாளில் ஒரு அற்புதமான கேரக்டரில் இப்போதுதான் முதல் தடவையாக தான் நடிப்பதாக சபிதா ஆனந்த் கூறியிருக்கிறார்,

படத்தின் தயாரிப்பாளரும், ஹீரோவுக்கு இணையான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

ஒளிப்பதிவு – மகிபாலன், இசை – செல்வா ஜானகிராஜ், படத் தொகுப்பு – சுரேஷ் அர்ஸ், சண்டை இயக்கம் – ஆக்ஷன் பிரகாஷ், கலை இயக்கம் – முனி கிருஷ்ணா, ஓலி வடிவமைப்பு – தரணிபதி, பாடல்கள் – ரவிதாஸ், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ஜோதி முருகன்.

இயக்குநர் ஜோதிமுருகன் இயக்குநர்கள் ராதாமோகன், சிம்பு தேவன், வேலு பிரபாகரன் போன்ற பிரபல இயக்குநர்களிடம் துணை இயக்குநராகப் பணியாற்றி இருக்கிறார்.

2014-ல் இவர் இயக்கி வெளியான ‘கபடம்’ திரைப்படம் மிகவும் சின்ன பட்ஜெட்டில் உருவாகியிருந்தாலும், அந்தப் படத்தை டிஜிட்டல் Platform-ஆன ‘அமேசான்’ நிறுவனம் படத்தின் பட்ஜெட்டைவிட அதிக விலை கொடுத்து வாங்கியது.

அதேபோல் இந்த ‘கண்டதை படிக்காதே’ படத்திற்காகவும் ‘அமேசான்’ நிறுவனத்துடன் பேச்சுவார்தை நடந்து கொண்டிருக்கிறது.

இந்த ‘கண்டதை படிக்காதே’ படம் பற்றி இயக்குநர் ஜோதி முருகன் கூறுகையில், “இதுவொரு ஹை கான்செப்ட் ஸ்டோரி லைனை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம். பிளாக் பஸ்டர் ஹிட் ஆகும் திரைக்கதை அமைப்பை கொண்ட படங்களை ஹாலிவுட்டில் ‘ஹை கான்செப்ட் திரைப்படம்’ என்று அழைப்பார்கள்.

இந்த மாதிரியான படங்களில் எந்த நடிகர் நடித்தாலும் படத்தின் கதை அம்சமே படத்தை சூப்பர் டூப்பர் ஹிட்டாக்கிவிடும். அதே மாதிரி இந்த படமும் ஹாரர், மர்டர், மிஸ்டரி, மற்றும் ஆக்ஷன் கலந்த ஜனரஞ்சமான திரைப்பமாக இருக்கும்.

படம் ஆரம்பித்து மூன்று நிமிடங்களுக்குள் ரசிகர்களின் கவனத்தை படம் கவர்ந்துவிடும். படத்தின் இறுதிக் காட்சி வரையிலும் சஸ்பென்ஸ் இருந்து கொண்டேயிருக்கும். ஒவ்வொரு காட்சியிலும் அடுத்து அடுத்து என்ன நடக்கும் என்கிற எதிர்பார்ப்பை தூண்டுகின்ற வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது..” என்றார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல், ஊட்டி, சென்னை ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.




error: Content is protected !!