‘காஞ்சனா-3’ போஸ்டர் வீடியோ ஒரே நாளில் 2 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.

‘காஞ்சனா-3’ போஸ்டர் வீடியோ ஒரே நாளில் 2 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.

நடன இயக்குநரும், நடிகருமான ராகவா லாரன்ஸின் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ‘முனி’. இதன் இரண்டாம் பாகம் ‘காஞ்சனா’ என்ற பெயரில் வெளிவந்தது. தொடர்ந்து டாப்ஸி, நித்யா மேனன் நடிப்பில் ‘காஞ்சனா-2’ திரைப்படமும் வெளியானது. வெளிவந்த இரண்டு பாகங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வசூலைக் குவித்தன.

இந்நிலையில் தற்போது இந்தப் படத்தின் 3-ம் பாகம் உருவாகியுள்ளது. ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்து வரும் இந்தப் படத்தை ராகவேந்திரா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் லாரன்ஸே தயாரித்துள்ளார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஓவியா மற்றும் வேதிகா இருவரும் நடித்துள்ளனர். மேலும் கோவை சரளா , தேவதர்ஷினி, ஸ்ரீமன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

விரைவில் ரிலீசாக இருக்கும் நிலையில், ‘காஞ்சனா-3’ படத்தின் மிரட்டலான மோஷன் போஸ்டரை பொங்கல் தினத்தன்று சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. அது வழக்கம் போல் வைரலாகி விட்டது.

இது குறித்து படத்தின் நாயகனும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ் பேசும்போது, “மோஷன் போஸ்டர் வெளியான நேற்று ஒரே நாளில் 2 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்திருக்கிறது. இன்னும் சில நாட்களில் அது பத்து மில்லியன் பார்வையாளர்களை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தளவு வைரலாக காரணமாக இருந்த என் ரசிகர்கள், இணையத்தளங்கள், பத்திரிக்கைகள், ஊடக நண்பர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. என் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து ஹீரோக்களின் ரசிகர்களும் இந்த ‘காஞ்சனா-3’ படத்தின் motion poster-ஐ பார்த்துவிட்டு பாராட்டு தெரிவித்திருக்கிறார்கள். அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்…” என்றார்.
error: Content is protected !!