‘ZEE5’ பொழுது போக்குத் தளத்தில் ‘கனா’ திரைப்படம்..!

‘ZEE5’ பொழுது போக்குத் தளத்தில் ‘கனா’ திரைப்படம்..!

இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் OTT தளமான ‘ZEE5’ தளத்தில் சென்ற ஆண்டு வெளியாகி பெரும் பாராட்டைப் பெற்றிருக்கும் ‘கனா’ திரைப்படம் வெளியாகியுள்ளது.

இதன் லின்க் இங்கே : https://www.zee5.com/movies/details/kanaa/0-0-63313

தற்போது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து கொண்டிருக்கும் இத்தருணத்தில் கிரிக்கெட் போட்டியை மையமாகக் கொண்டு, அதிலும் பெண்கள் கிரிக்கெட்டை வளர்த்தெடுக்கும் நோக்கில் உருவான இந்தக் ‘கனா’ திரைப்படம் வெளியாகியிருப்பது சாலப் பொருத்தமாகும்.

தற்போது தமிழ் குடும்பங்களில் செல்லப் பிள்ளையாக திகழ்ந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயனின் சொந்த நிறுவனமான எஸ்.கே.புரொடெக்சன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்தது.

சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் தர்ஷன், ரமா, இளவரசு மற்றும் பலரும் நடித்திருக்கும் இந்தப் படத்தை பிரபல பாடலாசிரியரும், நடிகருமான அருண்ராஜா காமராஜ் எழுதி இயக்கியிருந்தார்.

கெளசல்யா என்ற ஒரு கிராமத்துப் பெண்.. அரசுப் பள்ளியில் படித்து வரும் பெண்..  விளையாட்டில்.. அதுவும் ஆண்களே கோலோச்சிக் கொண்டிருக்கும் கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டு ஜெயித்துக் காட்டுவது என்பது நிச்சயமாக மிகப் பெரிய கனவுதான்.

அந்தக் கனவு கெளசல்யாவுக்கு எப்படி நனவானது..? அது நிறைவேற அந்தப் பெண்ணும், அவரது குடும்பத்தினரும் எப்பேர்ப்பட்ட தியாகங்களைச் செய்கிறார்கள். இந்தப் போராட்டக் களத்தில் அந்தப் பெண்ணின் முன் நிற்கும் சவால்கள் என்ன என்பதையெல்லாம் மிக சுவாரஸ்யமாகவும், உணர்வுப்பூர்வமாகும் சொல்லியதால்தான் இந்த ‘கனா’ திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது.

படத்தில் ‘கெளசல்யா’ என்ற கேரக்டரை ஏற்றிருந்த ஐஸ்வர்யா ராஜேஷ் தனது முந்தைய படங்களில் இருந்தெல்லாம் முற்றிலும் மாறுபட்ட ஒரு கேரக்டரில்.. பள்ளி மாணவியாக.. கிரிக்கெட் வீராங்கனையாக.. கனவை நனவாக்கத் துடிக்கும் பெண்ணாக.. சிறப்பாக நடித்து பெரும் புகழைப் பெற்றிருக்கிறார்.

தான் இருக்கும் படங்களிலெல்லாம் தன்னைக் குறிப்பிடாமல் விமர்சனங்களை முன் வைக்க முடியாது என்கிற அளவுக்கு தன்னுடைய நடிப்பைக் காண்பித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷூக்கு இந்தக் ‘கனா’ திரைப்படம் ஒரு மைல் கல். இறைவன் அவருக்குக் கொடுத்த கிப்ட் என்றே சொல்லலாம்.

இந்தச் சிறப்பம்சங்களால் இந்தக் ‘கனா’ திரைப்படம் இப்போது ‘ZEE5’ பொழுது போக்குத் தளத்தில் கடந்த 4 நாட்களால் மிக அதிகம் பேர் பார்த்திருக்கும் ஒரு திரைப்படமாக மாறியிருக்கிறது.

படத்தின் எழுத்தாளரும், இயக்குநருமான அருண்ராஜா காமராஜ் இது பற்றிப் பேசும்போது, “இந்தக் ‘கனா’ திரைப்படம்  பல்வேறு தடைகளை மீறி கனவுகளை வெல்லும் கதை. இந்தப் படம் உங்கள் மீது நீங்களே தன்னம்பிக்கை வைத்திருப்பது மற்றும் நீங்கள் நிர்ணயித்த இலக்கை நோக்கி கடுமையாக உழைத்துதான் அதை அடைய முடியும் என்பதைச் சொல்லுகிற திரைப்படம்.

பலரது வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களை இத்திரைப்படம் ஞாபகப்படுத்தியதால்தான் படம் வெளியான சமயத்தில் திரையரங்குகளில் மிக அற்புதமான வரவேற்பை பெற்றது. இப்போது இதை ‘ZEE5’-ல் பார்க்கும் பார்வையாளர்களின் பாராட்டுக்களை எதிர்நோக்கி காத்திருக்கிறோம்…” என்றார்.

‘ZEE5’ நிறுவனத்தின் இந்தியப் பிரிவின் வணிகத் தலைவரான மணீஷ் அகர்வால் இது பற்றிப் பேசும்போது, “பிராந்திய ரீதியிலான பேக்குகளை அறிமுகப்படுத்திய உலகின் முதல் OTT நிறுவனம் எங்களுடைய ‘ZEE5’ தளம்தான். கடந்த ஆண்டு நவம்பரில் அவை அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, சந்தா எண்ணிக்கையில் கணிசமான அளவுக்கு முன்னேறியிருக்கிறோம்.

அனைத்து மொழிகளிலும் எங்கள் திரைப்பட கையகப்படுத்தல் சந்தை வலுவாகியுள்ளது. பல்வேறு வகையான டிஜிட்டல் பிரீமியர்களைக் கொண்ட வலுவான பொழுது போக்கு நூலகமும் எங்களிடம் உள்ளது. எங்களிடம் சில பிளாக் பஸ்டர் தமிழ்ப் படங்களும் உள்ளன. அந்தப் பட்டியலில் இந்தக் கனா திரைப்படம் சமீபத்தில் சேர்ந்துள்ளது. நாங்கள் தொடர்ந்து இது போன்ற மக்கள் அதிகம் விரும்பும் பொழுது போக்கு சேவைகளில் அதிக அளவு முதலீடு செய்வோம்…” என்றார்.

ZEE5 தளத்தில் கனா திரைப்படத்தின் லின்க் இங்கே  : https://www.zee5.com/movies/details/kanaa/0-0-63313

 
error: Content is protected !!