தினேஷ் – அதிதி மேனன் நடிக்கும் ‘களவாணி மாப்பிள்ளை’ 

தினேஷ் – அதிதி மேனன் நடிக்கும் ‘களவாணி மாப்பிள்ளை’ 

‘நம்ம  ஊரு பூவாத்தா’, ‘ராக்காயி கோயில்’, ‘பெரிய கவுண்டர் பொண்ணு’, ‘கட்டபொம்மன்’, ‘நாடோடி மன்னன்’, ‘மாப்பிள்ளை கவுண்டர்’ உட்பட 16 சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த ராஜபுஷ்பா பிக்சர்ஸ் பட நிறுவனம் பதினேழு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பட தயாரிப்பில் ஈடுபட உள்ளனர்.

இந்த நிறுவனத்தின் தயாரிப்பாளரான மணிவாசகம்தான் இந்த அனைத்து படங்களையும் இயக்கியவர். அந்தக் காலக்கட்டத்தில் வணிக ரீதியான சக்சஸ்புல் தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் கவனிக்கப்பட்டவர் மணிவாசகம் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் மறைந்து  17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் படத் தயாரிப்பில் ராஜபுஷ்பா பிக்சர்ஸ் களமிறங்குகிறது. இந்தப் படத்தை இயக்குநர் மணிவாசகத்தின் மகனான காந்தி மணிவாசகமே இயக்குகிறார்.

படத்திற்கு ‘களவாணி மாப்பிள்ளை’   என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இதில்  தினேஷ் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக அதிதி மேனன் நடிக்கிறார். மற்றும் ஆனந்த்ராஜ், தேவயானி, ரேணுகா, மனோபாலா, மகாநதி சங்கர், மொட்டை ராஜேந்திரன், முனீஸ்காந்த் மற்றும் பலர் நடிக்கவுள்ளனர்.

ஒளிப்பதிவு – சரவணன் அபிமன்யு, இசை – என்.ஆர்.ரகுநந்தன், கலை – மாயா பாண்டி, படத் தொகுப்பு – பி.கே., நடனம் – தினேஷ், சண்டை பயிற்சி – திலீப் சுப்பராயன், தயாரிப்பு  மேற்பார்வை – சிவச்சந்திரன், இணை தயாரிப்பு – திருமூர்த்தி, தயாரிப்பு -ராஜேஸ்வரி மணிவாசகம், கதை, திரைக்கதை, இயக்கம் – காந்தி மணிவாசகம்.   

இந்தப் படத்தின் துவக்க விழா இன்று காலை நடைபெற்றது. படப்பிடிப்பு வரும் பிப்ரவரி 15-ம் தேதி பொள்ளாச்சியில் துவங்க உள்ளது. ஜனரஞ்சகமான காமெடியும், காதலும் கலந்த கதையில் இத்திரைப்படம் உருவாக உள்ளது.