இடைவேளையே இல்லாமல் வரப் போகும் புதிய திரைப்படம்..!

இடைவேளையே இல்லாமல் வரப் போகும் புதிய திரைப்படம்..!

இயக்குநர் விஜய்ஸ்ரீயின் இயக்கத்தில் சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி, ஸ்ரீபல்லவி ஆகியோரின் நடிப்பில் ‘தாதா 87’ என்கிற படத்தை கலை சினிமாஸ் நிறுவனம் பிரம்மாண்டமான செலவில் தயாரித்துள்ளது.

‘தாதா 87’ படத்தின் பாடல்களும், முன்னோட்டமும் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் விரைவில் இப்படம் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் கலை சினிமாஸ் நிறுவனம் தனது அடுத்தப் படத்தைத் துவக்கியுள்ளது.

இப்படத்தின் நடிகர், நடிகை மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களின் பெயர்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது.

ஒளிப்பதிவு – ராஜ் பாண்டி, இசை – தீபன் சக்ரவர்த்தி, படத் தொகுப்பு – நிஜந்தன். 

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை  ‘தாதா 87’ படத்தை இயக்கிய இயக்குநர் விஜய்ஸ்ரீ இயக்குகிறார். இவர் கலை சினிமாஸ் நிறுவனத்துடன் இணையும் இரண்டாவது படம் இது. 

பல புதிய பரிமாணங்களுடன் உருவாகும் இப்படம், திரையரங்கில் வெளியாகும்போது இடைவேளையின்றி திரையிடப்படும் என்றும், படத்தின் முதல் காட்சி நடு இரவில் 12 மணிக்கு திரையிடப்படும் என்றும் தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது. 

கலை சினிமாஸ் நிறுவனத்தின் இரண்டாம் படத்தின் பூஜை நேற்று வல்லக்கோட்டை முருகன் கோவிலில் நடைபெற்றுள்ளது.




error: Content is protected !!