நாயகனாக அம்பிகா மகன்-நாயகியாக லிவிங்ஸ்டன் மகள் நடிக்கும் ‘கலாசல்’ திரைப்படம்

நாயகனாக அம்பிகா மகன்-நாயகியாக லிவிங்ஸ்டன் மகள் நடிக்கும் ‘கலாசல்’ திரைப்படம்

கலைத்தாய் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் P.C.பாலு தயாரிக்கும் படம்   ‘கலாசல்.’ இந்த படத்தில் பிரபல நடிகை அம்பிகாவின் மகன் ராம் கேசவ் கதாநாயகனாக  அறிமுகமாகிறார். நாயகியாக பிரபல நடிகர் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா அறிமுகமாகிறார். மற்றும் ராதாரவி, அம்பிகா, முருகதாஸ், மதன்பாப், அபிஷேக், பானுசந்தர், சாய்பிரியா ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – பாபு குமார், இசை – நிஜாமுதீன், கலை – கல்லை தேவா, படத் தொகுப்பு – கோபி கிருஷ்ணா, சண்டை இயக்கம் – டேஞ்சர் மணி, நடன இயக்கம் -கல்யாண், கிரிஷ், தயாரிப்பு நிர்வாகம் – அருள், தயாரிப்பு – P.C.பாலு, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – அஸ்வின் மாதவன்.  இவர் இயக்குநர்கள் சுந்தர்.C, பத்ரி ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியவர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற 9-ம் தேதி பழனியில் துவங்கி, கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் ஒரே கட்டத்தில் நடைபெற  உள்ளது.

படம் பற்றி இயக்குநரிடம் பேசியபோது “சினிமாவில் சாதனை புரிந்த பிரபல நடிகை அம்பிகாவின் மகன், இயக்குனர், நடிகர், கதாசிரியர் என்று பல அவதாரம் எடுத்த லிவிங்ஸ்டன் மகள் இருவரையும் வைத்து முதல் படம் இயக்குவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.

படத்தின் கதையை ஒரு வரியில் சொல்ல வேண்டுமானால் மனிதனின் தேவைகள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. கடவுள்கிட்ட வேண்டிக்கிட்டு நமக்கு தேவை இல்லை என்று நினைக்கிற விஷயங்களை காணிக்கையாக செலுத்திவிட்டு. வேண்டியதை கேட்டுப் பெறுவது  பண்டம் மாற்று முறை மாதிரியான ஒரு வியாபாரம்தான்.

நாம் வேண்டாம் என்று செலுத்துகிற காணிக்கை விஷயங்கள் கார்பரேட் முதலாளிகளால் அப்பாவி மக்கள் மீது எப்படியெல்லாம் திணிக்கப்பட்டு வியாபாரமாக்கப்படுகிறது என்பதுதான் இந்த படத்தின் கதை…” என்றார் இயக்குநர்.