‘கஜினிகாந்த்’ படத்தின் டீஸர் வெளியீட்டு விழா..!

‘கஜினிகாந்த்’ படத்தின் டீஸர் வெளியீட்டு விழா..!

ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கஜினிகாந்த்’.

இத்திரைப்படத்தின் சிங்கிள் டீஸர் வெளியீட்டு விழா நேற்று மாலை கிரீன் பார்க் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த விழாவில் நாயகன் ஆர்யா, நாயகி சாயிஷா, மற்றும் படத்தில் நடித்திருக்கும் சம்பத், கருணாகரன், இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார்  மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்.