ஆர்யா-சாயிஷா நடிப்பில் ஸ்டூடியோ கிரீன் தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘கஜினிகாந்த்’

ஆர்யா-சாயிஷா நடிப்பில் ஸ்டூடியோ கிரீன் தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘கஜினிகாந்த்’

STUDIO GREEN  நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் K.E.ஞானவேல்ராஜா தயாரித்து  வழங்கும் புதிய திரைப்படம் ‘கஜினிகாந்த்’.

இந்தப் படத்தின் ஹீரோவாக நடிகர் ஆர்யா  நடிக்கவுள்ளார். ஆர்யாவுக்கு ஜோடியாக  ‘வனமகன்’  சாயிஷா  நடிக்கிறார்.

பாலமுரளி  பாலு  இசையமைக்க,  பல்லு ஒளிப்பதிவு  செய்கிறார்.  பிரசன்னா G.K.  படத் தொகுப்பை  கவனிக்க, கோபி ஆனந்த் கலை இயக்கம் செய்கிறார். 

‘ஹரஹர  மஹாதேவகி’, மற்றும்  ‘இருட்டு  அறையில்  முரட்டு குத்து’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் சன்தோஷ்  P.ஜெயக்குமார் இந்தப் படத்தை இயக்கவுள்ளார்.

‘கஜினிகாந்த்’ படத்தின்  பூஜை  நிகழ்ச்சி இன்று  காலை சென்னையில் இனிதே  நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா, நடிகர் ஆர்யா, இயக்குநர் சன்தோஷ்.பி.ஜெயக்குமார், நடிகர் வெங்கட் மற்றும் படத்தில் பங்கு பெறும் தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இப்படத்தின்  படப்பிடிப்பு  டிசம்பர்  முதல்  வாரத்தில்  தொடங்கவிருக்கிறது.