full screen background image

தமிழ் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டத்தைத் தரப் போகும் ‘கைதி’

தமிழ் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டத்தைத் தரப் போகும் ‘கைதி’

Dream Warrior Pictures சார்பில் தயாரிப்பாளர்கள் S.R.பிரகாஷ் பாபு,  S.R.பிரபு மற்றும் Vivekananda Pictures சார்பில் திருப்பூர் விவேக் ஆகியோர் இணைந்து  தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கைதி’.

இப்படத்தில் கார்த்தி, நரேன், ரமணா, மரியம் ஜார்ஜ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சாம் C.S. இசையமைத்துள்ளார். பிலோமின் ராஜ் படத் தொகுப்பு செய்துள்ளார். N சதீஷ்குமார் கலை இயக்கம் செய்துள்ளார். அன்பறிவ் சண்டை இயக்கத்தை மேற்கொண்டுள்ளார். பொன் பார்த்திபன், லோகேஷ் கனகராஜ் இருவரும் இணைந்து வசனம்  எழுதியுள்ளனர். ‘மாநகரம்’ இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் ‘கைதி’ திரைபடத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி தமிழ்ச் சினிமா உலகத்தையே கலக்கியது. வெளியீட்டுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் ரசிகர்கள் டிரெய்லரை கொண்டாடி வருகின்றனர்.

‘அஞ்சாதே’ புகழ் நரேன் படத்தில் இப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

actor naren

இந்தக் ‘கைதி’ படம் பற்றி நரேன் பேசுகையில், “கார்த்தியும் நானும் நெருக்கமான நண்பர்கள். பர்ஸனலா நிறைய பேசிப்போம். இயக்குநர் இந்தக் கேரக்டருக்கு என் பேரை சொன்னவுடனே கார்த்தி ‘நானே போன் பண்றேன்’னு சொல்லி என்னைக் கூப்பிட்டு சொன்னார்.

‘அஞ்சாதே’ படத்துக்கப்புறம் நிறைய போலீஸ் கேரக்டர் வந்தது. அது மாதிரியே இருக்கும்ன்னு நினைச்சு நான் அதையெல்லாம் ஏத்துக்கலை. இதுல எப்படினு கேட்டேன். ‘நல்ல கேரக்டர். சிறப்பு அதிரடிப் படை போலீஸ் அதிகாரியாக நடிக்கணும்’னு சொன்னார். ‘படத்துல நீங்களும் இருக்கீங்களா..?’ன்னு கேட்டேன். ‘ஆமா’ன்னு சொன்னார். சட்டுன்னு ஒத்துக்கிட்டேன்.

கார்த்தி ஒரு படத்த அவ்வளவு சீக்கிரம் ஒத்துக்க மாட்டார். அவரே இருக்கார். அப்புறமென்னன்னு நினைச்சேன். கூடவே, இயக்குநர் லோகேஷோட ‘மாநகரம்’ படத்தையும் நான் பார்த்திருக்கேன். எனக்கு ரொம்ப பிடிச்ச படம் அது. அவர் இயக்கத்துல இப்படி ஒரு டீம்ல வாய்ப்பு கிடைக்கும்போது, ‘ஏன் பண்ணக் கூடாது..?’ன்னு நினைச்சு உள்ள வந்துட்டேன்.

லோகேஷ் என்கிட்ட கதை சொன்ன பத்து நிமிஷத்துல தெரிஞ்சுடுச்சு.. படம் கண்டிப்பா சூப்பாரா இருக்கப் போகுதுன்னு. இப்போ படமும் நல்லா வந்திருக்கு.

kaithi stills

எனக்குத் தெரிஞ்சு ஒரு பெரிய கமர்ஷியல் படத்தில ஹீரோயினே இல்லாத படமென்றால் அது இதுதான். இப்படியொரு படம் பண்ண கார்த்திக்கு நிறைய தைரியம் வேணும்.

தனி மேனரிசம் பண்றதுக்கு இந்தப் படத்தில வாய்ப்பே இல்லை. படமே ஒரு ஆபரேஷன்லதான் ஆரம்பிக்கும். பரபரனு ஓடிட்டே இருக்கும். ஒரு சிச்சுவேஷன்ல மாட்டிக்கிற நல்ல போலிஸ் எப்படி இருப்பான்..? அவ்வளவுதான் கதை. ரெண்டாவது அவனுக்கு அடிபட்டிருக்கும். நீங்க டிரெய்லர்ல அதைப் பாத்திருப்பீங்க. அந்தக் கையோட அவன் என்ன பண்றான்… அதுதான் படம்.

இந்த ஷீட்டிங்கே ரொம்ப கஷ்டம். முழுக்க நைட்தான் ஒரு நாள் தூங்கலைனாலும் நமக்கு சோர்வா இருக்கும். தொடர்ந்து 40, 50 நாள்னா எப்படியிருந்திருக்கும்..?  ஆனால் படத்திலேயும் அந்த கேரக்டர் சோர்வா இருக்கும். அதனால் அதை அப்படியே மெயிண்டைன் பண்ணிட்டேன். கார்த்திகூட இருந்ததால ரொம்ப ஈஸியா இருந்துச்சு.

kaithi stills

சென்னை தாண்டி செஙகல்பட்டு பக்கத்தில, அப்புறம் கேரளா பார்டர்வரைக்கும் ஷீட் பண்ணினோம். குளிர்தான் ரொம்ப புதுசா இருந்தது அதுவும் தமிழ்நாட்டுல. 12 மணிவரைக்கும் ஓகேதான். ஆனால் அதுக்கப்புறம் 2, 3 மணிக்கு குளிர் பின்னும். நாங்ககூட பரவாயில்லை.. ஏன்னா எங்களுக்கு 1 மணி நேரம், 2 மணி நேரம் ரெஸ்ட் கிடைக்கும். ஆனால், டெக்னிக்கல் டீமுக்கு அது எதுவும் இல்ல. அவங்கதான் ரொம்பவும் கஷ்டப்பட்டிருக்காங்க.

எல்லாப் படத்திலயும் ஒரு கேப் இருக்கும்.. நாம எஞ்சாய் பண்ணலாம்… ஷுட்டே கலகலப்பா இருக்கும். இதுல அப்படி கிடையாது. படமே ராவா இருக்கும். பரபரன்னு எல்லாரும் ஓடிக்கிட்டே இருப்பாங்க.. ஆனால், சினிமாவை  காதலிக்கிற ஒரு டீம். அவ்வளவு காதலோட எல்லோரும் வேலை பார்த்திருக்காங்க. நாங்களும் சந்தோஷமா வேலை பார்த்தோம். படம் எடுக்கும்போதே படம் சூப்பரா இருக்கும்னு நம்பிக்கை இருந்தது.

படப்பிடிப்பின்போது கார்த்திகூட நிறைய பேசினேன். ஒண்ணா.. அவர்கூட இவ்வளவு நாள் இருந்தது இந்தப் படத்துலதான் நடந்தது. கார்த்தி ரொம்ப தெளிவா இருக்கார். என்ன பண்றோம்கிறது அவருக்கு நல்லாவே தெரிஞ்சுருக்கு. அவரோட படங்களை பார்த்தாலே தெரியும்.

IMG_2857

இந்தப் படத்தில அவருக்கும் எனக்கும் நிறைய காட்சிகள் இருக்கு. அவருக்கு எனக்கும் நெருக்கமான நட்பு இருக்கறதால நடிக்கும்போது எங்களுக்கு ரொம்ப ஈஸியா இருந்தது. அதே மாதிரி அவருக்கு  ஒரு எமோஷனல் பக்கம் இருக்கும். அதில சூப்பரா ஃபெர்ஃபார்ம் பண்ணிருக்காரு. ரசிகர்களுக்கும் கண்டிப்பா பிடிக்கும்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சினிமாவை மட்டுமே வாழ்க்கையா நேசிக்கிற ஒரு ஆள். அதைத் தவிர எதுவும் பேச மாட்டார். எப்பவும் வேலைதான். நான் ஒரு கமல் ஃபேன். அவர் என்னவிட கமலோட பெரிய ஃபேன். நிறைய ஹாலிவுட் படம் பார்ப்பார். அதப் பத்தி பேசுவோம்.

இங்க இருக்குற ஆடியன்ஸ்க்கு ஹாலிவுட் ஸ்டைலோடு இன்னும் சில விஷயங்களை சேர்க்கணும். அதில் கில்லாடி லோகேஷ். அவர் வித்தியாசமா பண்ற அதே நேரத்தில் இங்க இருக்குற ஆடியன்ஸ்க்கு என்ன கொடுக்கணும்ன்றதுலேயும் தெளிவா இருக்கார்.

IMG_3422

படம் சூப்பரா வந்திருக்கு. இதுக்கு முக்கியமான காரணம் கேமராமேன் சத்யன். ‘முகமூடி’ல அவர்கூட வேலை பார்த்திருக்க்கேன். இந்தப் படத்தில விஷூவலா மிரட்டிருக்கார். லோகேஷ், கார்த்தி எல்லாரும் டிஸ்கஸ் பண்ணி ஒவ்வொரு ஷாட்டையும் புதுசா முயற்சி பண்ணி எடுத்திருக்காங்க. இப்படிபட்ட டீம்ல இருந்ததே எனக்குச் சந்தோஷம்தான்.

இந்தாண்டு தீபாவளி தமிழ் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டமா இருக்கும். ‘கைதி’ கமர்ஷியல் படம்தான்.. ஆனால் வித்தியாசமா இருக்கும்.. புதுசா இருக்கும்…” என்றார் உற்சாகத்துடன்..!!!

Our Score