‘சிங்கம்-3’-யுடன் இணைந்து ஓடும் ‘கடுகு’ படத்தின் டிரெயிலர்

‘சிங்கம்-3’-யுடன் இணைந்து ஓடும் ‘கடுகு’ படத்தின் டிரெயிலர்

தமிழ் திரையுலகிற்கு  தரமான திரைப்படங்களை மட்டுமே வழங்க கூடிய இயக்குநர்களில் ஒருவராக கருதப்படுபவர் இயக்குநர் விஜய் மில்டன்.

தற்போது இவரது இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘கடுகு’ திரைப்படம், தமிழ் திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு சராசரி மனிதனின் வாழக்கையின்போது அவனுக்குள் ஏற்படும் காதல், அந்தக் காதலால் ஏற்படும் பிரச்சினைகள்.. அதன் விளைவுகள்.. இதனை உள்ளடக்கிய யதார்த்தமான கதையில் இயக்குநர் விஜய் மில்டன் இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார்.

தரமான கதையம்சங்கள் கொண்ட திரைப்படங்களை மட்டுமே  ரசிகர்களுக்கு வழங்க வேண்டும் என்ற குறிக்கோளோடு செயல்பட்டு கொண்டிருக்கும், நடிகர் சூர்யாவின் ‘2D எண்ட்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனம், இந்த ‘கடுகு’ படத்தை வெளியிட இருப்பது குறிப்பிடத்தக்கது.

இன்று உலகமெங்கும் வெளியான ‘சிங்கம்-3’ படத்துடன், இந்த ‘கடுகு’ படத்தின் டீசரும் ஒளிபரப்பப்படுவது மேலும் சிறப்பம்சமாகும். 

“எங்களின் கடின உழைப்பிற்கும், அர்ப்பணிப்பிற்கும்  கிடைத்த பலனாகத்தான் நாங்கள் இதனை கருதுகிறோம். தமிழ் சினிமா மீது அளவு கடந்த பற்றும், காதலும் இருக்கும் சூர்யா சாரோடு, நாங்கள் கை கோர்த்திருப்பது எங்களுக்கு பெருமையாக இருக்கிறது.  

‘சிங்கம்-3’  படத்தின் வாயிலாக  எங்கள் ‘கடுகு’ திரைப்படம் விளம்பரப்படுத்தப்படுவது, எங்கள் படத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்கும். தற்போது ‘கடுகு’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது, அதற்காக சூர்யா சாருக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன்…” என்று உற்சாகமாக கூறுகிறார் இயக்குநர் விஜய் மில்டன்.
error: Content is protected !!