நடிகர் மன்சூரலிகானின் மகன் நாயகனாக அறிமுகமாகும் ‘கடம்மான் பாறை’

நடிகர் மன்சூரலிகானின் மகன் நாயகனாக அறிமுகமாகும் ‘கடம்மான் பாறை’

நடிகர் பிரபுவின் நடிப்பில், பி.வாசு இயக்கிய ‘வேலை கிடைச்சுருச்சு’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நடிகராக அறிமுகமான மன்சூர் அலிகான். ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தின் மூலம் நட்சத்திர அந்தஸ்தை அடைந்தார். அதற்கு பிறகு இதுவரையிலும் எல்லா மொழிகளிலும் சேர்த்து 250 படங்களுக்கு மேல் நடித்ததுடன், சில படங்களை தயாரித்தும், இயக்கியும் இருக்கிறார்.   

அடுத்ததாக அவரது ராஜ் கென்னடி பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பாக எழுதி இயக்கி, தயாரித்திருக்கும் படம் ‘கடம்மான் பாறை.’

இந்தப் படத்தில் இளம் கதாநாயகனாக மன்சூரலிகானின் மகன் அலிகான் துக்ளக் அறிமுகமாகியுள்ளார். 

கதாநாயகியாக அனு ராகவி நடித்திருக்கிறார். இன்னொரு நாயகியாக ஜெனி பெர்ணாண்டஸ் நடித்திருக்கிறார். மற்ற நடிகர்கள் அனைவரும் புதியவர்கள். மன்சூரலிகான் சிங்கம், புலி, கரடி சிறுத்தை மாதிரி வாழும் மனிதனாக நடித்துள்ளார்.

ஒளிப்பதிவு – மகேஷ்.T, இசை – ரவிவர்மா, பாடல்கள்- சொற்கோ, ரவிவர்மா, மன்சூரலிகான், கலை – ஜெயகுமார், நடனம் – சந்துரு, சிவா, ஜெயா, சம்பத்ராஜ், சண்டை பயிற்சி – ராக்கி ராஜேஷ், தயாரிப்பு நிர்வாகம் – J.அன்வர், எழுத்து, இயக்கம்  –  மன்சூரலிகான்.

படம் பற்றி இயக்குநர் மன்சூரலிகான் பேசும்போது, “காட்டுக்குள்ளே நடக்கும் திருவிழா; நாட்டுக்குள்ளே நடக்கும் பூகம்பம். இதுதான் படத்தின் மையக் கதை..!

பொண்ணுங்ககிட்ட   இருக்கிற ஒண்ணு,  அவங்களவிட மத்தவங்களுக்குத்தான் அதிகமாகப் பயன்படும். அதுதான் கதை..!

காட்டுக்குள் மாட்டிக் கொள்ளும் சில இளைஞர்களும், சில இளம் பெண்களும் எதிர் கொள்கிற பிரச்சனைகள்தான் படத்தின் திரைக்கதை.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுக்க, முழுக்க ஆந்திராவில்தான் நடைபெற்றுள்ளது. இதுவரை யாரும் படம் பிடிக்காத இடங்களைத் தேடிப் பிடித்து அங்கே காட்சிகளை படமாக்கி உள்ளோம். கமர்ஷியல், காமெடி கலந்த படமாக இந்த ‘கடம்மான் பாறை’ திரைப்படம் உருவாகியுள்ளது…” என்றார்  இயக்குநர் மன்சூரலிகான்.




error: Content is protected !!