மன்சூரலிகான் இயக்கி நடித்த ‘கடமான் பாறை’ படத்திற்கு ‘A’ சான்றிதழ்

மன்சூரலிகான் இயக்கி நடித்த ‘கடமான் பாறை’ படத்திற்கு ‘A’ சான்றிதழ்

நடிகர் மன்சூரலிகான்  தனது ராஜ் கென்னடி பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பாக எழுதி இயக்கி, தயாரித்துள்ள திரைப்படம் ‘கடமான் பாறை.’

இந்த படத்தில் இளம் கதாநாயகனாக மன்சூரலிகானின் மகன் அலிகான் துக்ளக் அறிமுகமாகிறார். மன்சூரலிகானும் ஒரு  முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். கதாநாயகியாக அனுராகவி நடித்துள்ளார். இன்னொரு நாயகியாக ஜெனி பெர்ணாண்டஸ் நடித்திருக்கிறார்.

மற்றும் சிவசங்கர் மாஸ்டர், சார்மி, தேவி தேஜு, பிளாக் பாண்டி, அமுதவாணன், முல்லை, கோதண்டம், பழனி, ‘கனல்’ கண்ணன், போண்டாமணி, பயில்வான் ரங்கநாதன், ‘லொள்ளு சபா’ மனோகர், வெங்கல்ராவ், ஆதி சிவன், விசித்திரன், ‘கூல்’ சுரேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – மகேஷ், இசை – ரவிவர்மா, பாடல்கள் – விவேகா, சொற்கோ, டோலக் ஜெகன், ரவிவர்மா, மன்சூரலிகான், கலை – ஜெயகுமார், நடனம் –  டாக்டர் சிவசங்கர், சம்பத்ராஜ், சங்கர், சந்துரு, சிவா, சண்டை இயக்கம் – ராக்கி ராஜேஷ், தயாரிப்பு நிர்வாகம்  – J.அன்வர், ஒருங்கிணைப்பு – ஜே,ஜெயகுமார், ஆக்கம், இயக்கம்  –  மன்சூரலிகான்.

‘கடமான் பாறை’ படத்தை பார்த்த சென்சார் குழு உறுப்பினர்கள் படத்திற்கு  ‘A’ சான்றிதழ் வழங்கி உள்ளனர்.

இது பற்றி பேசிய நடிகர் மன்சூரலிகான், “இது நான் முன்பே எதிர்பார்த்ததுதான். என் படத்தில் என்னென்ன கமர்ஷியல் விஷயங்கள் இருக்க வேண்டுமோ அதுவெல்லாம் அப்படியே இருக்கிறது.  அதனால்  ‘A’  சான்றிதழ்தான் கிடைக்கும் என்று நினைத்திருந்தேன். அதுதான் கிடைத்திருக்கிறது. படத்தில் காதல், மோதல், காமெடி எல்லாமும் இருக்கு..” என்றார் மன்சூரலிகான்.

படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடை பெற உள்ளது.
error: Content is protected !!