‘கடைசி எச்சரிக்கை’ படத்தின் டீசரை வெளியிட்டார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு..!

‘கடைசி எச்சரிக்கை’ படத்தின் டீசரை வெளியிட்டார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு..!

இயக்குநர் சுகுமார் கணேசனின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கடைசி எச்சரிக்கை’ படத்தின் முதல் டீசரை வெளியிட்டு வாழ்த்தினார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு.

இந்தப் படத்துக்கு வி.சந்திரசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். A.I.S.நோபல் ராஜா இசையமைத்துள்ளார். கலை – ஏ மாரியப்பன், மக்கள் தொடர்பு எஸ் ஷங்கர். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், எழுத்து இயக்கம் – சுகுமார் கணேசன், தயாரிப்பு – வி.சீனிவாசன்.

kadaise echarikkai movie poster

முன்னதாக ‘கடைசி எச்சரிக்கை’ படத்தின் முதல் தோற்றம் மற்றும் தலைப்பு வடிவமைப்பை இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான வேல்ராஜ் வெளியிட்டார். இந்தப் படத்தின் தலைப்பும், டிசைன்களும் திரையுலகில் படம் பற்றி பெரும் ஆர்வத்தைக் கிளப்பியிருந்தன.

இந்த நிலையில் படத்தின் டீசரை இன்று வெளியிட்டு வாழ்த்தினார் தயாரிப்பாளர்  கலைப்புலி எஸ்.தாணு. டீசரைப் பார்த்த பிறகு அவர் பேசுகையில், “இன்று உலகம் மிக ஆபத்தான சூழலில் உள்ளது. இன்றைய சூழலுக்கு ஏற்ற படமாக உருவாகியுள்ளது இந்த ‘கடைசி எச்சரிக்கை’ திரைப்படம். அனைவரும் பார்க்க வேண்டிய படம் இது. இயக்குநர் சுகுமார் கணேசனுக்கும், படக் குழுவினருக்கும் எனது வாழ்த்துகள்..” என்று வாழ்த்தினார்.
error: Content is protected !!