“விரைவில் நானும் அண்ணனும் இணைந்து நடிப்போம்…” – நடிகர் கார்த்தியின் நம்பிக்கை..! 

“விரைவில் நானும் அண்ணனும் இணைந்து நடிப்போம்…” – நடிகர் கார்த்தியின் நம்பிக்கை..! 

2D எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் நடிகர் சூர்யா தயாரித்து வரும் திரைப்படம் கடைக்குட்டி சிங்கம்.

இந்தப் படத்தில் சூர்யாவின் தம்பியான நடிகர் கார்த்தி ஹீரோவாக நடிக்கிறார். சாயிஷா, பரியா பவானி சங்கர் இருவரும் நாயகிகளாக நடித்துள்ளனர்.

மேலும், சத்யராஜ், சூரி, பானுப்ரியா, விஜி சந்திரசேகர், பொன்வண்ணன், ஸ்ரீமன், இளவரசு, சரவணன், மாரிமுத்து, ஜான் விஜய், சௌந்தர்ராஜன் மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இசை – டி.இமான், ஒளிப்பதிவு – வேல்ராஜ், படத் தொகுப்பு – ரூபன், சண்டை பயிற்சி – திலிப் சுப்பராயன், கலை இயக்கம் – வீரசமர், எழுத்து, இயக்கம் – பி.பாண்டிராஜ்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று காலை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.

0J3A5528

இந்த விழாவில் நடிகர் சிவகுமார், படத்தின் தயாரிப்பாளர் நடிகர் சூர்யா, நாயகன் கார்த்தி, 2டி எண்டர்டெயின்மென்ட் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர பாண்டியன், இயக்குநர் பாண்டிராஜ், நடிகர்கள் சத்யராஜ், சூரி, நடிகைகள் சாயிஷா, ப்ரியா பவானி ஷங்கர், பானுப்ரியா, விஜி சந்திரசேகர், பொன்வண்ணன், ஸ்ரீமன், இளவரசு, சரவணன், மாரிமுத்து, ஜான் விஜய், சௌந்தர்ராஜன், இசையமைப்பாளர் டி.இமான், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், படத் தொகுப்பாளர் ரூபன், சண்டை பயிற்சியாளர் திலிப் சுப்ராயன், கலை இயக்குநர் வீரசமர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் நாயகன் கார்த்தி பேசும்போது, “அண்ணன் சூர்யாவின் தயாரிப்பில் நடிப்பேன் என்று நான் நினைத்துகூட பார்த்தது இல்லை. இப்படத்தை அவர் தயாரித்துள்ளார். அவர் தயாரிப்பில் நடித்ததில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. நாங்கள் இருவரும் முதன்முறையாக இணைந்து பணியாற்றியுள்ளோம்.

surya-karthi

இந்தக் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் படப்பிடிப்பு அதிகாலை ஆறு மணிக்கு ஆரம்பித்தால் இரவு தாமதமாகத்தான் முடியும். இயக்குநர் பாண்டிராஜ் எல்லாவற்றையும் ப்ளான் செய்துதான் சரியாக செய்து முடித்தார்.

இயக்குநர் பாண்டிராஜ் இந்த படத்துக்காக 28 கதாபாத்திரங்களை உருவாக்கியுள்ளார். ஒவ்வொன்றும் தனித்துவமாக இருப்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. பட்டணத்தில் வேலை செய்யும் எல்லோரையும் கிராமத்துக்கு வந்து விவசாயம் செய்ய வைக்கும் ஒரு படமாக ‘கடைக்குட்டி சிங்கம்’ இருக்கும்.

நான் முதன் முறையாக இசையமைப்பாளர் இமானின் இசையில் நடிக்கிறேன். இப்படத்தில் பாடல்கள் சிறப்பாக அமைந்துள்ளன…” என்றார் கார்த்தி.

விழாவில் தயாரிப்பாளரும், நடிகருமான சூர்யா பேசும்போது, “இந்தக் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் கிளிசரின் போடமால் அழுது பல நடிகர்கள் அர்ப்பணிப்போடு நடித்துள்ளனர். ஒருவருக்கு படத்தின் மீதும் அதீத ஈர்ப்பு இருந்தால் மட்டும்தான் இதை போல் சிறப்பாக நடிக்க முடியும்.

surya

எப்போதும் ஒரு விஷயத்துக்காக நாம் உண்மையாக உழைத்தால் அது கண்டிப்பாக நமக்கு பலனை தரும். அப்படி உண்மையாக உருவான இயக்குநர் பாண்டிராஜின் கதையால் இப்படம் இவ்வளவு நடிகர் பட்டாளத்தோடு சிறப்பாக அமைந்துள்ளது.

சத்யராஜ் மாமா நாங்கள் குழந்தையாக இருக்கும்போது அவர் வாங்கிய முதல் சம்பளத்தில் எனக்கும் கார்த்திக்கும் சாப்பிட இனிப்பு வகைகளை வாங்கி தந்தார். இப்போது சத்யராஜ் மாமா நடிக்கும் கார்த்தியுடன் நடிக்கும் படத்தை நாங்கள் தயாரித்துளோம். இது எங்களுக்கு வாழ்கையில் கிடைத்த மிகப் பெரிய பரிசு.

விரைவில் நானும், என் தம்பி கார்த்தியும் சேர்ந்து நடிப்போம். இதனை நானும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்…” என்றார்.

விழாவில் நடிகர் சிவகுமார் பேசும்போது, “இந்த நாள் என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத ஓர் நாளாக இருக்கும். என்னென்றால் என் பிள்ளைகளின் மாமனான சத்யராஜை வைத்து எங்கள் 2-டி நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. அதில் கார்த்தியுடன் அவர் நடித்துள்ளார்.

sivakumar-karthi

சத்யராஜ் ஜமீன் பரம்பரையை சேர்ந்தவர். அப்படி இருந்தும் அவர் சென்னைக்கு வந்து ரத்தம் சிந்தி கடுமையாக உழைத்து முன்னேறியுள்ளார். ஜமீன் பரம்பரையிலிருந்து வந்து கடுமையாக உழைத்து முன்னேறிய முதல் நபர் சத்யராஜ்தான்.

சத்யராஜ் காலகட்டத்தில் வந்த நடிகர்களுள் அவர் மட்டும்தான் இன்னும் தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்யடேயிருக்கிறார். சத்யராஜ் தான் வாங்கிய முதல் சம்பளத்தில் சூர்யாவுக்கும், கார்த்திக்கும் இனிப்பு வாங்கி வந்து கொடுத்தார். அவரை வைத்து இன்று சூர்யா படம் தயாரிக்கிறார். அதில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார். நிஜமாக இன்றுதான் வாழ்கையில் எனக்கு சந்தோஷமான நாள். இதைவிட எனக்கு மகிழ்ச்சியான நாள் வேறெதுவும் இருக்க முடியாது…” என்றார் நடிகர் சிவகுமார்.