‘கடைக்குட்டி சிங்க’த்தில் ஜொலிக்கும் சூப்பர் சிங்கர் தனுஸ்ரீ மற்றும் தேஜ்…!

‘கடைக்குட்டி சிங்க’த்தில் ஜொலிக்கும் சூப்பர் சிங்கர் தனுஸ்ரீ மற்றும் தேஜ்…!

‘கடைக்குட்டி சிங்கம்’ குடும்பத்தை சேர்ந்த இக்குழந்தைகள் நமக்கு அறிமுகம் இல்லாதவர்கள் அல்ல. உலகம் முழுவதும் இருக்கும் தமிழ் மக்கள் அனைவரின் உள்ளங்களையும் கவர்ந்த இக்குழந்தைகளை அறியாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். தனுஸ்ரீ தமிழ் குடும்பங்களின் செல்லபிள்ளை என்பதில் மாற்று கருத்து இல்லை. அதே போல் அவருடைய தம்பி தேஜ், தன் அக்காவுக்கு நிகரான திறமை கொண்ட வல்லவர் என்றே சொல்ல வேண்டும்.

இவர்கள் விரைவில்  வெளியாகவுள்ள ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் குழந்தை நட்சத்திரங்களாக நடித்துள்ளனர். இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்துக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

kadaikkutty singam movie stills

‘சூப்பர் சிங்கர்’ குடும்பத்தை சேர்ந்த பாடகியான தனுஸ்ரீயிடம் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் நடித்து பற்றி கேட்டபோது, "கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் படப்பிடிப்பு தளம் ஜாலியாகவே இருந்தது. எல்லோரும் என்னை அன்பாக பார்த்துக் கொண்டார்கள். சத்யராஜ் அங்கிள், கார்த்தி அங்கிள், சாயிஷா ஆண்ட்டி மற்றும் பிரியா ஆண்ட்டி எல்லோரும் அவங்க குடும்பத்து குழந்தைகளாக என்னை பார்த்துக் கொண்டார்கள்.   

படப்பிடிப்பு தளத்தில் நான் சில நேரங்களில் பாடினேன். அதை பார்த்து எல்லோரும்  எனக்கு முத்தம் குடுத்தார்கள், ஆனால் இப்போதைக்கு  நடிப்புதான் எனக்கு முதலில் முக்கியமானது. நடிப்பில்தான் இப்போது எனது முழு கவனமும் இருக்கிறது.

‘கடைக்குட்டி சிங்கம்’ படபிடிப்பு காலை முதல் மாலைவரை தொடர்ந்து நடக்கும். சில நேரங்களில் இரவு தாமதமாக முடியும். மீண்டும் காலை சீக்கிரமாக படப்பிடிப்பு துவங்கும். படப்பிடிப்பு தளத்தில் என் தம்பிதான் அதிக குறும்பு செய்வான். நான்  எப்போதும் அமைதியாகத்தான் இருப்பேன். 

படப்பிடிப்பின்போது தன்னை பாசத்தோடு கவனித்துக் கொண்ட சூர்யா, கார்த்தி மற்றும் பாண்டிராஜ் அங்கிள்களுக்கு நன்றி..." என்றார்.