‘காற்றின் மொழி’ படத்தில் ஜோதிகா பேசும் பெண்களுக்கான பத்து கட்டளைகள்..!

‘காற்றின் மொழி’ படத்தில் ஜோதிகா பேசும் பெண்களுக்கான பத்து கட்டளைகள்..!

பாப்டா மீடியா ஒர்க்ஸ் இந்தியா நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் G.தனஞ்ஜெயன், S.விக்ரம் குமார், லலிதா தனஞ்ஜெயன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘காற்றின் மொழி’.

இந்தப் படம் சென்ற ஆண்டு ஹிந்தியில் வித்யா பாலன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘துமாரி கலு’ படத்தின் ரீமேக்காகும். தமிழுக்காக படத்தின் திரைக்கதையில் சிற்சில மாற்றங்களைச் செய்திருக்கிறார்கள்.

தமிழில் வித்யா பாலன் கேரக்டரில் ஜோதிகா நடிக்கிறார். மேலும், இப்படத்தில் விதார்த், லட்சுமி மஞ்சு, M.S.பாஸ்கர், மனோபாலா, குமாரவேல், மோகன் ராமன், உமா  பத்மநாபன், சீமா தனேஜா, சிந்து மற்றும் பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். 

இசை – A.H. காஷீப், பாடல்கள் – மதன் கார்க்கி, ஒளிப்பதிவு – மகேஷ் முத்துசாமி, கலை இயக்கம் – கதிர், உடை வடிவமைப்பு – பூர்ணிமா, படத் தொகுப்பு – பிரவீன் K.L., வசனம் – பொன்.பார்த்திபன், மக்கள் தொடர்பு – ஜான்சன். 

இந்தப் படத்தை தமிழின் முதன்மையான இயக்குநர்களில் ஒருவரான ராதா மோகன் இயக்குகிறார்.

இத்திரைப்படத்தில் பெண்களுக்கான பத்து 10 கட்டளைகள் என்று ஜோதிகா சொல்லும் ஒரு விஷயம் படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..!

இது நடிகை ஜோதிகா பேசும்போது, “இந்தக் ‘காற்றின் மொழி’ திரைப்படம், எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று. அதனால்தான் வசனங்கள் அதிகம் உள்ள இப்படத்திற்கு நானே டப்பிங் பேசி வருகிறேன். 

பெண்கள் சுயமாக சம்பாதித்து, தங்கள் வாழ்க்கையை தங்களுக்கு பிடித்தபடி வாழ வேண்டும் என்ற கருத்தை இப்படம் வலியுறுத்துகிறது. அதற்கு அவர்கள் குடும்பத்தினரும் ஆதரவு தர வேண்டும்.

இத்தகைய பெண்களின் மேம்பாட்டிற்கு வழி காட்டும் 10 கட்டளைகளை உள்ளடக்கிய ஒரு போஸ்டர் டிசைனை இந்தக் ‘காற்றின் மொழி’ படத்திற்காக இயக்குநர் ராதா மோகன் உருவாக்கியிருக்கிறார். இது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதை இப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமைப்படுகிறேன்…” என்று கூறியிருக்கிறார்.

ஜோதிகா குறிப்பிட்ட அந்த பத்துக் கட்டளைகள் இதுதான் :

பெண்ணே..!!!

  1. உன் விருப்பம் போல் உடை உடுத்துவாயாக.
  2. நீ விரும்புவதை செய்வாயாக.
  3. உன் கணவன் உன்னை ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டாதிருப்பாயாக.
  4. பசித்தால் முதலில் நீயே சாப்பிடுவாயாக.
  5. குண்டாய் இருக்க விரும்பினால் குண்டாய் இருப்பாயாக.
  6. வீட்டு பணிகளில் உன் கணவனையும் பங்கெடுக்க செய்வாயாக.
  7. நீ சம்பாதித்து உன் விருப்பம் போல் செலவு செய்வாயாக.
  8. உன் மனம் மறுப்பதை, ஏற்காதிருப்பாயாக 
  9. ஆணும் பெண்ணும் சரி சமம் என்பதை அறிவாயாக.
  10. மனதில் பட்டத்தை சொல்வாயாக.