full screen background image

கார்த்தி-அதிதி ராவ் நடிப்பில் மணிரத்னத்தின் ‘காற்று வெளியிடை’ திரைப்படம்

கார்த்தி-அதிதி ராவ் நடிப்பில் மணிரத்னத்தின் ‘காற்று வெளியிடை’ திரைப்படம்

இந்தியாவின் மோஸ்ட் வான்ட்டட் இயக்குநரான மணிரத்னம், தனது அடுத்தப் படத்தினையும் வழக்கம்போல சத்தமில்லாமல் துவக்கிவிட்டார்.

படத்தின் பெயர் ‘காற்று வெளியிடை’. மகாகவி சுப்ரமணி பாரதியின் “காற்று வெளியிடை கண்ணம்மா.. உந்தன் காதலை எண்ணிக் களிக்கின்றேன்..” என்ற புகழ் பெற்ற பாடலின் முதல் இரு வரிகளை தலைப்பாக்கியிருக்கிறார் மணிரத்னம்.

இந்தப் படத்தில் கார்த்தி ஹீரோவாக நடிக்கிறார். அதிதி ராவ் ஹீரோயினாக நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். பாடல்களை கவிஞர் வைரமுத்து எழுதுகிறார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.  படத்தின் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் ரேடியோ ஜாக்கியான ஆர்.ஜே.பாலாஜி நடிக்கிறார்.

மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட இருக்கிறது. படம் ஷூட்டிங் போவதற்கு முன்பாகவே வெளியீட்டாளர் முடிவாகி ஒப்பந்தம் கையெழுத்தானது நிச்சயமாக மணிரத்னத்தின் பெயருக்கே உரிய மவுசைக் காட்டுகிறது..!

இப்படத்தில் தான் நடிக்கும் கதாபாத்திரத்துக்காக நடிகர் கார்த்தி மிகவும் சிரமப்பட்டு தன் உடல் எடையைக் குறைத்திருக்கிறாராம்.

இப்படத்தின் படப்பிடிப்பு, ஊட்டியில் துவங்கியுள்ளது. முதல் பதிவாக பாடல் காட்சியை படமாக்குகிறார்களாம். இந்த வருட இறுதியில் படம் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகியுள்ளது.

Our Score