காற்றின் மொழி படத்திற்காக பாடல் எழுதும் போட்டி அறிவிப்பு..!

காற்றின் மொழி படத்திற்காக பாடல் எழுதும் போட்டி அறிவிப்பு..!

பாப்டா மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பாளர் கோ.தனஞ்ஜெயன், S. விக்ரம் குமார், லலிதா தனஞ்ஜெயன் தயாரிப்பில், ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘காற்றின் மொழி.’ இப்படத்தை ராதாமோகன் இயக்கியுள்ளார். 

விரைவில் வெளியாகவுள்ள ‘காற்றின் மொழி’ படத்தின் படக் குழு விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு ‘காற்றின் மொழி பாடல் எழுதும் போட்டியை’ அறிவித்துள்ளது.

பாடல் எழுத தெரிந்தவர்கள், சினிமாவில் பாடல் எழுதுவதை கனவாக கொண்டவர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டு தங்களுடைய திறமையை வெளிக்காண்பிக்க பயன்படுத்திக் கொள்ளலாம்.

சிறந்த பாடல்கள் இரண்டை மதன் கார்க்கி தேர்ந்தெடுப்பார். தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு பாடல்களும் மக்கள் முன்னால் பாடப்பட்டு எழுதியவர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படும். 

இந்த போட்டியில் பங்கு பெற கடைசி தேதி 22.09.18 (சனிக்கிழமை). 

போட்டியில் பங்கு பெற விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளை படித்துவிட்டு பாடல் எழுதும் போட்டியில் பங்கு பெறலாம்.

 
error: Content is protected !!