காதலர் தினத்தில் வெளியான ‘காத்து வாக்குல ஒரு காதல்’ டீஸர்..!

காதலர் தினத்தில் வெளியான ‘காத்து வாக்குல ஒரு காதல்’ டீஸர்..!

சீரடி சாய்பாபா நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்  எஸ்.பூபாலன் தயாரித்துள்ள திரைப்படம் ‘காத்து வாக்குல ஒரு காதல்’.

இப்படத்தை கதை திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதி நாயகனாக நடித்து இயக்குகிறார் மாஸ் ரவி. நாயகியாக லட்சுமி பிரியா நடிக்கிறார். மற்றும் தெறி வில்லன் சாய்தீனா, கல்லூரி வினோத், ஆதித்யா கதிர், லொள்ளு சபா ஆண்டனி ஆகியோருடன் புதுமுகங்கள் சிலரும் நடிக்கின்றனர்.

ஒளிப்பதிவு – சுபாஷ் மணியன். படத் தொகுப்பு – ஸ்ரீராஜ்குமார்,  இசை – ஜுபின், பப்ளிசிட்டி டிசைன் – ரெட் லைன்,  இணை தயாரிப்பு – லைக் அண்ட் ஷேர் மீடியா.

படம் பற்றி இயக்குநர் மாஸ் ரவி கூறும்போது, “இந்தப் பூமியில் எங்கும் நிறைந்திருப்பது காற்று மட்டுமல்ல காதலும்தான். இரண்டையுமே கறுப்பா, சிவப்பா என்று பார்க்க முடியாது. இனிப்பா, கசப்பா என்று சுவைக்க முடியாது. ஆனால் உணர மட்டுமே முடியும்.

காற்றில் கலந்து வரும் பூமணம் போலவும், துர்மணம் போலவும் காதலில் காமம் கலந்த கெட்ட காதலும் உண்டு. அன்பு செறிந்த தூய நல்ல காதலும் உண்டு. அப்படி ஒரு புனிதமான காதலை இரண்டு மயிலிறகு மனசுகளை இனம் பிரித்து ஒரு கதையாக இழை பிரித்து உருவாகியிருக்கும் படம்தான் இந்த ‘காத்து வாக்குல ஒரு காதல்’ திரைப்படம்.

இத்திரைப்படத்தைப் பார்த்துவிட்டு இப்படி ஒரு காதலி கிடைக்கவில்லையே என ஆண்களும், இப்படி ஒரு காதலன் கிடைக்கவில்லையே என பெண்களும் ஏங்கும் அளவுக்கான காதல் கதை இதில் இருக்கிறது. 

காதலின் மகத்துவம் கூறும் இந்தப் டத்தின் டீஸரை காதலர் தினத்தில் வெளியிட்டோம். டீஸர் வெகுஜன ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள். நடிகர்  யோகிபாபு, இயக்குநர்கள் சுப்ரமணிய சிவா, விஜய்சந்தர் ஆகியோர் பாராட்டியதை மறக்க முடியாது…” என்கிறார்.
error: Content is protected !!