‘காத்திருப்போர் பட்டியல்’ இசையை நடிகர் விஷால் வெளியிட்டார்..!

‘காத்திருப்போர் பட்டியல்’ இசையை நடிகர் விஷால் வெளியிட்டார்..!

Lady Dream Cinemas சார்பில் தயாரிப்பாளர் பாலாஜி தயாரித்துள்ள புதிய திரைப்படம் ‘காத்திருப்போர் பட்டியல்’.

இந்தப் படத்தில் சச்சின் மணி ஹீரோவாக நடித்துள்ளார். நந்திதா ஸ்வேதா நாயகியாக நடித்துள்ளார். மேலும், அருள்தாஸ், அப்புக்குட்டி, சென்ராயன், மனோபாலா, மயில்சாமி, நான் கடவுள் ராஜேந்திரன், அருண்ராஜா காமராஜ், சித்ரா லட்சுமணன், சூப்பர் குட் சுப்ரமணி, பாவா லட்சுமணன், முத்துக்காளை மற்றும் பலர் நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம் – டி.ராஜசேகர், ஒளிப்பதிவு – எம்.சுகுமார், இசை – சீன் ரோல்டன், பாடல்கள் – யுகபாரதி, அருண்ராஜா காமராஜ், ஜி.கே.பி., படத் தொகுப்பு – ரூபன், கலை இயக்கம் – லால்குடி என்.இளையராஜா, நடனம் – ஷோபி, நோபிள், சண்டை பயிற்சி – எம்.கணேஷ், ஸ்டில்ஸ் – ராஜ், மக்கள் தொடர்பு – நிகில்.

இந்தப் படத்தில் இசை மற்றும் டிரெயிலர் வெளியீட்டு விழா இன்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

இந்த விழாவில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன், இயக்குநர், நடிகர் மனோஜ்குமார், நடிகை சுஜா வாருணி, இயக்குநர் பிரவீன்காந்த், மற்றும் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள், தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

‘காத்திருப்போர் பட்டியல்’ படத்தின் இசையை நடிகர் விஷால் வெளியிட, தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் பெற்றுக் கொண்டார்.