புதுமுகங்கள் நடிக்கும் ‘காதலும் மோதலும்’ திரைப்படம்..!

புதுமுகங்கள் நடிக்கும் ‘காதலும் மோதலும்’ திரைப்படம்..!

யூனிக் சினி கிரியேஷன் என்ற புதிய பட தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ரவ்னக் தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘காதலும் மோதலும்’.

இந்தப் படத்தில் அறிமுக நாயகனாக அமுதன் நடிக்கிறார். நாயகிகளாக சுமா பூஜாரி, அங்கணா, தீர்தா ஆகிய மூன்று பேர் நடிக்கின்றனர்.

20190603112616_IMG_0355 (4)

இப்படத்திற்கு மோகன்குமார் ஒளிப்பதிவு செய்ய.. ஜஸ்டின் பிரொன்டோஸ் படத் தொகுப்பு மேற்கொள்ள.. கிறிஸ்டி இசையமைக்கிறார். சண்டை பயற்சியாளராக டேன்ஜர் மணி மற்றும் நடன இயக்குநராக ரமேஷ் ஆகியோர் பணியாற்றுகிறார்கள். அறிமுக இயக்குநரான சதீஷ் இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு நேற்று காலை ஏவி.எம். ஸ்டூடியோவின் பிள்ளையார் கோவிலில் நடைபெற்ற பூஜை நிகழ்ச்சியுடன் துவங்கியது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் பேரரசு மற்றும் தென்னிந்திய திரைப்பட மக்கள் தொடர்பாளர் சங்கத்தின் தலைவர் விஜய முரளி, நடிகர் செளந்தர்ராஜா ஆகியோர் கலந்து கொண்டு படக் குழுவினரை வாழ்த்தினார்கள்.