பிருத்விராஜன் – சாந்தினி நடிக்கும் ‘காதல் முன்னேற்றக் கழகம்’

பிருத்விராஜன் – சாந்தினி நடிக்கும் ‘காதல் முன்னேற்றக் கழகம்’

ப்ளுஹில்ஸ் புரொடக்ஷன் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் மலர்க்கொடி முருகன்,  தயாரித்துள்ள படம் ‘காதல் முன்னேற்றக் கழகம்.’

இந்தப் படத்தில் இயக்குநரும்,  நடிகருமான பாண்டியராஜனின் மகன் ப்ரித்விராஜன்  கதாநாயகனாக நடித்துள்ளார். நாயகியாக சாந்தினி  நடிக்கிறார். மற்றும் சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, கிஷோர்குமார், ‘நாதஸ்வரம்’ முனிஸ்ராஜா, அமீர் ஹலோ கந்தசாமி ஆகியோரும் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சிவசேனாதிபதி நடித்திருக்கிறார்.

ஒளிப்பதிவு –  ஹாரிஸ் கிருஷ்ணன், இசை – பி.சி.சிவன், பாடல்கள் –   யுகபாரதி, மோகன்ராஜ், உமா சுப்ரமணியம், மாணிக் சத்யா, படத் தொகுப்பு – சுரேஷ் அர்ஸ், நடன இயக்கம் – அசோக்ராஜா, சண்டை இயக்கம் – அம்ரீன் பக்கர், கலை இயக்கம் –  பிரகதீஸ்வரன், தயாரிப்பு நிர்வாகம் – முத்தையா, விஜயகுமார். தயாரிப்பு –  மலர்க்கொடி முருகன். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – மாணிக் சத்யா.

படம் பற்றி இயக்குநர் மாணிக் சத்யா பேசும்போது,  “இந்தப் படம் 1985-களில் நடக்கின்ற கதை.  கதாநாயகன் நடிகர் கார்த்திக்கின் தீவிர ரசிகர். அவரைப் போலவே முடியை வளர்த்துக் கொண்டு ரசிகர் மன்றம் அது, இது என்று வேலைக்கு போகாமல் அலைந்து கொண்டிருப்பவர். நாயகி சாந்தினி அதே ஊரில் டீச்சராக வேலை பார்ப்பவர். அவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்படும் காதல் என்னவாகிறது என்பதுதான் படம். சிவசேனாதிபதி படத்தின் கதைக்கு முதுகெலும்பாய் ட்விஸ்ட் கேரக்டராக ஜொலிக்கிறார்.

துரோகத்தில் மிக கொடூரமான துரோகமாக கருதப்படுவது நம்பிக்கை துரோகம்தான். அதிலும் நட்புக்குள் நடக்கும் நம்பிக்கை துரோகம் மிக மிக கொடூரமானது. அதைத்தான் இதில் சொல்லி இருக்கிறோம். யதார்த்தமான கதையாக படம் வந்திருக்கிறது. கிராமப்புற வாழ்வியலை பதிவிட்டிருக்கிறோம். நட்பையும் வலுவாக சொல்லி இருக்கிறோம்.

படத்தைப் பார்த்த பாண்டியராஜன் சார் பாராட்டியதுடன் கடைசி15 நிமிட கிளைமாக்ஸ் காட்சிகள் நெருப்பு மாதிரி இருக்கிறது என்று எங்களைப் பாராட்டினார்.

படத்தின் படப்பிடிப்பு  சென்னை, ஊட்டி, கடலூர் மாவட்டம்,  திட்டக்குடி,  விருத்தாசலம்,  பெரம்பலூர் போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது. படம் விரைவில் திரைக்கு வர உள்ளது…” என்றார் இயக்குநர் மாணிக் சத்யா.

 




error: Content is protected !!