full screen background image

வைல்ட் லைப் போட்டோகிராபர் கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடிக்கும் ‘கா’ திரைப்படம்

வைல்ட் லைப் போட்டோகிராபர் கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடிக்கும் ‘கா’ திரைப்படம்

ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான் மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தற்போது  ‘பொட்டு’ படத்தை மூன்று மொழிகளில் தயாரித்துள்ளனர். ‘பொட்டு’ படம் வரும் மே மாதம் வெளியாக உள்ளது.

இதைத் தொடர்ந்து தயாரிப்பாளர்கள் ஜான் மேக்ஸ், ஜோன்ஸ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘கா.’

இந்த படத்தில் ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் இளவரசு நடிக்கவிருக்கிறார். மற்றும்  நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் சலீம் கவுஸ் இந்தப் படத்தில் நடிக்கிறார். மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ஒளிப்பதிவு – அறிவழகன், இசை – அம்ரிஷ், படத் தொகுப்பு – கோபி கிருஷ்ணா, கலை – லால்குடி இளையராஜா, சண்டை பயிற்சி – விக்கி, நிர்வாக தயாரிப்பு – சங்கர், தயாரிப்பு – ஜான் மேக்ஸ், ஜோன்ஸ், இணை தயாரிப்பு – ரவிகாந்த், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் –  நாஞ்சில்.

இது உலக மக்களுக்கான படம். ‘கா’ என்றால் இலக்கியத் தமிழில் ‘காடு’,’ ‘கானகம்’ என்று பொருள்படும். முழுக்க. முழுக்க காட்டை மையப்படுத்தி இந்தப் படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளதால் ‘கா’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

கதாநாயகியை முன்னிலைப்படுத்திதான் இந்தப் படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. கொடிய மிருகங்கள் வாழும் காட்டுப் பகுதிகளுக்கு சென்று அவற்றின் வாழ்க்கை முறைகளையும், மற்றும் குணாதிசயங்களையும் பதிவு செய்யும் Wild Life Photographer கதாப்பாத்திரத்தில் ஆண்ட்ரியா நடிக்கிறார்.

இதன் படப்பிடிப்பு அந்தமான், மூணார், மேற்கு தொடர்ச்சி மலைகள் போன்ற இடங்களில் நடைபெற உள்ளது. 

 

Our Score