காமெடி படத்தில் இணையும் ஜோதிகா-ரேவதி கூட்டணி..!

காமெடி படத்தில் இணையும் ஜோதிகா-ரேவதி கூட்டணி..!

‘36 வயதினிலே’, ‘மகளிர் மட்டும்’, ‘நாச்சியார்’, ‘செக்கச் சிவந்த வானம்’, ‘காற்றின் மொழி ‘ஆகியப் படங்களைத் தொடர்ந்து நடிகை ஜோதிகா, தற்போது புதிய படமொன்றில் நடிக்கவிருக்கிறார்.

இந்தப் படத்தை நடிகர் சூர்யாவின் 2-D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கும் இந்த கதையில் வித்தியாசமான கேரக்டரில் ஜோதிகா நடிக்கவிருக்கிறார். இவருடன் நடிகை ரேவதி, யோகிபாபு, ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், ஜெகன் உள்ளிட்ட  பலரும் நடிக்கிறார்கள்.

DSC_1576

இந்தப் படத்திற்கு ஆனந்த்குமார் ஒளிப்பதிவு செய்ய, விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை வீர சமர் கவனிக்க, விஜய் படத்தை தொகுக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் கல்யாண். இவர் இதற்கு முன்பாக ‘குலேபகாவலி’ படத்தை இயக்கியவர்.

இந்தப் புதிய படத்திற்கான பூஜை இன்று காலை சென்னையிள் நடைபெற்றது. நடிகர் சூர்யா கிளாப் அடித்து படபிடிப்பைத் தொடங்கிவைத்தார்.

DSC_1660

இந்தத் துவக்க விழாவில் சூர்யா, ஜோதிகா, ரேவதி, நடிகர்கள் ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், இயக்குநர் பிரம்மா, தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கப் பொருளாளர் எஸ்.ஆர். பிரபு, படத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர சுந்தர பாண்டியன், படத்தின் இயக்குநர் கல்யாண் மற்றும் படக் குழுவினர் உள்ளிட்ட  பலரும் கலந்து கொண்டனர்.

இன்னும் பெயரிடப்படாத இந்தக் காமெடி படத்தின் படப்பிடிப்பு நாளை துவங்குகிறது.

இதனிடையே நடிகை ஜோதிகா அறிமுக இயக்குநர் ராஜ் இயக்கத்தில் ஆசிரியையாக நடித்த படத்தின் படபிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன் நிறைவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
error: Content is protected !!