குழந்தைகளை மகிழ்விக்க வருகிறது ‘ஜம்புலிங்கம் 3-டி’ படம்

குழந்தைகளை மகிழ்விக்க வருகிறது ‘ஜம்புலிங்கம் 3-டி’ படம்

பல நூற்றாண்டுகளாக இந்தியாவுக்கும், ஜப்பானுக்கும் கலாசார தொடர்பு இருந்து கொண்டேதான் இருக்கிறது. பல்வேறு பரிமாணங்களை  தாண்டி இன்றும் அந்தத் தொடர்பு நம்முடைய சினிமா துறை மூலமாக தொடர்ந்திருக்கிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘முத்து’ திரைப்படம் ஜப்பானில் பெற்ற மாபெரும் வெற்றி, ஜப்பானிய ரசிகர்களுக்கு தமிழ் படங்கள் மீது உள்ள ஆர்வத்தை தூண்டி வருகிறது.

DSC_0279

‘அம்புலி 3-டி’ படத்தை இயக்கிய ஹரீஷ் நாராயணன் - ஹரி ஷங்கர் இரட்டையர்கள்  இயக்கி, எம்.எஸ்.ஜி. மூவீஸ் மற்றும்  சங்கர் பிரதர்ஸ் தயாரிப்பில், எம்.பி.எல். பிலிம்ஸ்  சார்பில் பி.எல்.பாபு  இந்த மாதம்  13-ம் தேதி வெளியிட  இருக்கும் 'ஜம்புலிங்கம் 3-டி' படம் இந்திய - ஜப்பான் உறவை மீண்டும்  மேம்படுத்தியுள்ளது.

‘அம்புலி 3-டி’, ‘ஆ’, ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து ஹரி  - ஹரீஷ் இரட்டை இயக்குனர்கள் இயக்கியிருக்கும் இந்த  'ஜம்புலிங்கம் 3-டி' படத்தில் 100-க்கும் மேற்பட்ட ஜப்பானிய கலைஞர்கள் நடித்து உள்ளனர்.

IMG_7683  

படம் பற்றிப் பேசிய இரட்டை இயக்குநர்களான ஹரி மற்றும் ஹரீஷ், "இந்தப் படத்தின் தயாரிப்பாளரான ஹரி,  ஜப்பான் கலாசார மையத்தின் தலைவராக இருப்பதாலோ என்னவோ இந்தப் படத்தில் பங்கேற்க, ஜப்பானிய  கலைஞர்களின் ஆர்வம் மிக அதிகமாக இருந்தது.

ஆர்வம் ஒரு பக்கம் இருப்பினும், அவர்களுடன் எங்களது சம்பாஷனைகள் பெரும்பாலும் ஊமை மொழியில்தான் இருந்தது. அதைப் படமாக்கி இருந்தாலே, அதுவே ஒரு பெரிய நகைச்சுவை   படமாக இருந்திருக்கும். அந்த அளவுக்கு காமெடியான கலந்துரையாடலாக இருந்தது.

IMG_3543

இந்தப் படத்தின் கதை ஒரு இந்திய கிராமத்தில் துவங்கி ஜப்பானில் சென்று முடிகிறது. நமது ஊரில் குழந்தைகளுகான  படங்களே வெளி வருவதே இல்லை என்ற  குறையை  இந்த ‘ஜம்புலிங்கம் 3-டி’ படம் நிச்சயமாகத் தீர்க்கும்.

இந்தப் படத்தை திரையிட  திரையரங்கு உரிமையாளர்களுக்கிடையே இருக்கும் ஆர்வம், இந்தக் கோடைக் காலத்தில் குழந்தைகளுக்கு நல்ல பொழுதுப் போக்கை தர வேண்டும் என்ற அவர்களது எண்ணத்தையும் காட்டுகிறது.

3-டி தொழில் நுட்பம்தான் இருக்கிறதே என்று நினைத்து, எல்லா கதைகளுக்கும் அதனைப் பயன்படுத்த முடியாது. அதற்க்கேற்ற  கதை, திரைக்கதை வேண்டும். இந்தப் படத்தில் அதற்கு தேவையான அத்தனை அம்சங்களும் நிறைய இருக்கிறது. இந்தப் படம் நிச்சயம் குழந்தைகளைக் கவரும்.." என்று நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.