‘ஜிகர்தண்டா’ தயாரிப்பாளருக்கு கிடைத்த பம்பர் பரிசு..!

‘ஜிகர்தண்டா’ தயாரிப்பாளருக்கு கிடைத்த பம்பர் பரிசு..!

மூன்றே நாட்களில் ஏழு கோடி ரூபாய் வசூல் என்று துவங்கிய 'ஜிகர்தண்டா' வசூலில் பரம திருப்தி..

மொத்தத்தில் நிச்சயமாக இரு மடங்கு லாபம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு..

படம் பார்த்த ரசிகர்கள், பிரபலங்கள் அனைவரும் பாராட்டித் தள்ளியிருக்கிறார்கள்..

பலர் கேட்டும் கிடைக்காத 'மூன்று முகம்' படத்தை ரீமேக் செய்யும் உரிமை கிடைத்தது..

இப்படி பலவித சந்தோஷங்களில் இருக்கும் 'ஜிகர்தண்டா' படத்தின் தயாரிப்பாளர் கதிரேசனுக்கு மேலும் ஒரு பம்பர் பரிசு கிடைத்துள்ளது.

அது தனுஷின் அடுத்த படத்தைத் தயாரிக்கும் வாய்ப்பு..

'எதிர்நீச்சல்' படத்தின் இயக்குநர் துரை செந்தில்குமார் சொன்ன ஒரு கதை தனுஷிற்கு மிகவும் பிடித்துப் போக.. நடிப்பதற்கு உடனேயே ஒத்துக் கொண்டாராம்..

தயாரிப்பாளராக யார் என்றதற்கு கதிரேசனை கை காட்டியிருக்கிறார் தனுஷ்.

'வேலையில்லா பட்டதாரி' படத்தின் வெற்றியினால் மீண்டும் விநியோகஸ்தர்கள் மத்தியில் முதலிடத்தைப் பிடித்திருக்கும் தனுஷின் அடுத்த படமென்றால், தயாரிப்பாளருக்கு அது லாட்டரி அதிர்ஷ்டம்தானே..?

அதிர்ஷ்ட தேவதை கதிரேசனை பின் துரத்துகிறது என்றே சொல்லலாம்..

தனுஷின் இந்த கால்ஷீட் ஒதுக்குதலுக்கும், 'வேலையில்லா பட்டதாரி'க்காக 'ஜிகர்தண்டா' படத்தை ஒரு வாரம் ஒத்திப் போட்டதற்கும் யாராவது முடிச்சுப் போட்டு யோசித்தால் இந்தக் கம்பெனி அதற்கு பொறுப்பல்ல..!