ஜீவா – ஷாலினி பாண்டே இணையும் புதிய படம்

ஜீவா – ஷாலினி பாண்டே இணையும் புதிய படம்

ஆல் இன் பிக்சர்ஸ்  நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜயராகவேந்திரா மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கும் மூன்றாவது படத்தில் நடிகர் ஜீவா கதாநாயகனாக நடிக்கிறார். இது ஜீவாவின் 29-வது திரைப்படமாகும்.

இதில் ஜீவாவுக்கு ஜோடியாக அர்ஜுன் ரெட்டி புகழ் நடிகை ஷாலினி பாண்டே நடிக்கிறார். இதற்கு கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் டான் சாண்டி.

படத்தைப் பற்றி இயக்குநர் டான் சாண்டி பேசும்போது, “ஹெய்ஸ்ட் காமெடி த்ரில்லர் ஜேனரில் இத்திரைப்படம் உருவாகிறது. ‘விக்ரம் வேதா’ புகழ் சாம் சி.எஸ். இசையமைக்கிறார். ரூபன் படத் தொகுப்பு செய்கிறார். இந்தப் படத்தில் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தும் விசயம் ஒன்றும் இடம் பெறுகிறது. படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது.” என்றார்.




error: Content is protected !!